பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம்- பொருளதிகாரம்-உரைவளம் ثانی تائی ._صلى الله عليه وسلم

இது சுற்றத்தாரின்மை கூறலிற் செல்வ நிலையாமை யாயிற்று. பக்கமென்றதனாற் பெண்டிர் போல்வார் காத்தலும் பேயோம்பாத பக்கமுங் கொள்க.

ஏனைய வந்துழிக் காண்க.

இன்னன் என்று இரங்கிய மன்னையானும்-ஒருவன் இறந் துழி அவன் இத்தன்மையோனென்று ஏனையோர் இரங்கிய சழிவு பொருட்கண் வந்த மன்னைக் காஞ்சியானும்:

இது பலவற்றின் நிலையாமை கூறி இரங்குதலின் மன்னைக் காஞ்சியென வேறு பெயர் கொடுத்தார். இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற் பற்றியே வருமென்றற்கு 'மன் கூறினார். இது மன்னையெனத் திரிந்து காஞ்சியென்பதனோ டடுத்து நின்றது, இஃது உடம்பொடு புணர்த்தல்.

"சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறம்-உ டு) என இப் புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருடந்தது.

'பாடுநர்க் த்ேத "பல்புக முன்னே’’ (புறம்-உ உக) இது மன் அடாது அப்பொருடந்தது.

'செற்றன் றாயினும்' என்னும் (உ.உ.சு) புறப்பாட்டு முதலி யனவும் அன்ன.

இதனை ஆண்பாற் கையறுநிலை யெனினும் அமையும்."

இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்-இத்தன்மைய தொன்றினைச் செய்தலாற்றே னாயின் இன்னவாறாகக் கடவேனெனக் கூறிய வஞ்சினக் காஞ்சி யானும்:

அது தான்செய்யக் கருதியது பொய்த்துத் தனக்கு வருங் குற்றத்தால் உயிர் முதலியன துறப்ப னென்றல். சிறப்பு வீடு பேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு."

உதாரணம் :

"மெல்ல வந்தெ சால்லடி பொருந்தி' (புறம்-எங்.)

سی۔ دسبمبنی*

4. மன்னைக் காஞ்சி என்ற துறை, ஆண்பாற்கையறுநிலை எனவும் வழங் கப்பெறும் என்பது கருத்து.

(பாடம்) 1. மன்னே கூறினார்: 2 நின்றதென்னும்:

3 பல்புக ஜினனே:

- 5. 'பாங்கு அருஞ்சிறப்பு என்பதற்குத்

வீட்டின்பம் என முன்ன்ச்ப் பொருள்

புரிச் சிறப்பு என்பதற்கு வி

தந்தார் நச்சினார்க்கினியர்.

தனக்குத் துணையில்லாத கூறினாராதலின் துன் னருஞ்சிறப்பு’ என் டுபேறன்றி உலகியலிற் பெறு ஞசிறப்பு.’ என விளக்கம்