பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

色一母、 தொல்காப்பியம்-பொருளதிகாரம் - உரைவளம்

நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்-பெண்கோளொழுக்கத்தினொத்து மறுத் தல் பற்றிப் பகைவனாய் வலிந்து கோடற்கு எடுத்துவந்த அரச னோடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்:

வேந்தியலாவது உயிர்போற்றாது வாழ்தலின், அவரது நிலை யின்மை நோக்கி அவரோடொத்து மகளிரைப் படுத்தற்கஞ்சி மறுப் பாராதலின் அஞ்சியவென்றும், மேல்வந்தவென்றுங் கூறினார். அம்முது குடிகள் தாம் பொருதுபடக் கருதுதலின் உயிரது நிலை யாமை உணர்ந்த காஞ்சி யாயிற்று. பாலென்றதனான் முதுகுடி களேயன்றி அனைநிலைவகை யெனப்பட்டார் கண்ணும்" (தொல்-புறத்திணை-உ0) இத்துறை நிகழ்தல் கொள்க.

உதாரணம் :

துதிவேல் கொண்டு துதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையு நெடிய வல்லது பணிந்துமொழி பலனே இஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மாம்படு சிறுதீப் போல

வணங்கா யினடான் பிறந்த ஆர்க்கே’’ (புறம்-கூகச) என வரும்.

'களிறனைப்பக் கலங்கின. கா.அ (புறம்-உசடு)

இதனுள் "நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென" என்றவின், அரசர்க்கு மகட்கொடைக் குரியரல்லாத அனைநிலை வகையோர்பாற் பட்டது.

முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகை_இ ஈரைந்தாகு மென்ப-தன் கணவன் தலையைத் தன்முகத்தினும் முலையினுஞ் சேர்த்துக் கொண்டு, அத்தலையான் மனைவி யிறந்த நிலைமையானுந் தொகை பெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவாரா சிரியர் என்றவாறு.

1. அனை நிலை என்றது, வாகைத்திணையின் கண் பார்ப்பனப் பக்கம் முதல் பாலறிமரபிற் பொருநர்கண் ன்ப்திதாக முற் குறித்த ஆறுபகுதிகளிலும் அடங்காத பல்வேறு வென்றிவகைகளைத் தொகுத் தக்கூறும் ஏழாவது வகை. இதனை முற்கூறிய ஆறு வகையோடும் இணைத்துக் கூறும் நச் சினார்க்கிணி:ர் விளக்கம் ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதன் றாம். -