பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம் {ویحیِ تھی .سe؟

தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார் தாமே தனித்தி ருந்த தென்று கூறிக்,

'குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்: (புறம் எச) என்னும் புறப்பாட்டுக் காட்டுவாரும் உளர்.

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் - மனைவி தன் கணவன் முடிந்தபொழுதே உடன் முடிந்துபோகிய செலவுநினைந்து கண்டோர் பிறர்க்குணர்த்திய மூதானந்தத்தானும்:

ஆனந்தம்-சாக்காடு. முதுமை கூறினார், உழுவலன்புபற்றி, இப்படியிறத்தலின் இது யாக்கை நிலையின்மை;

நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும் மிகுதிமிக்க அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின முது பாலையானும்:

புலம்பிய வெனவே அழுதல் வெளிப்படுத்தல் கூறிற்று; பாலை யென்பது பிரிவாகலின், இது பெரும்பிறிதாகிய பிரிவாதல் நோக்கி முதுபாலை யென்றார். நனிமிகு சுரமென்று இரு கால் அதனருமை கூறவே, பின்பணிப் புரிவு அதற்குச் சிறந்ததன்றா யிற்று.

இதுவும் இன்பமும் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று.

கழிந்தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்- கணவனோடு மனைவியர் கழிந்துழி அவர்கட் பட்ட அழிபொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்து படா தொழிந்த ஆயத்தாரும் பரிசில்பெறும் விறலியருந் தனிப்பட ருழந்த செயலறு நிலைமையானும்:

ஒழிந்தோரென வரையாது கூறினமையிற் கழிந்தோராற் புரக்கப்படும் அவ்விருதிறத்தாரையும் உடன்கொள்க. கழிந்தோ ரென்றும் பன்மையால் ஆண்பாலுந் தழிஇயினார்; கையறுநிலை அவரையின்றி அமையாமையின் ஆண்பால் கையறுநிலை மன்னைக்காஞ்சியுள் அடங்கும். அழிவா வன புனல்விளையாட் டும், பொழில் விளையாட்டுந், தலைவன்வென்றியும் போல்வன.

1. அவரை :ன்றிக் கையறு நிலையமையாமையின் கழிந்தோர் என்ற பன்மையால் ஆண்பாலும் தழி இயினார்’ என இயையும், -