பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா ககூ 2_. త78%

காதலி இழந்த தபுதார நிலையும்-தன் மனைவியைக் கணவ னிழந்த தபுதார நிலையானும்:

என்றது தாரமிழந்த நிலை. தன் காதலியை இழந்தபின் வழி முறைத் தாரம் வேண்டின், அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும் எஞ்ஞான்றும் மனைவியில்லாதானுந் தபுதார நிலைக்கு உரியனா யினும், இது காஞ்சியாகாதென்றற்குந், தபுதார நிலையென்றே பெயர்பெறுதன் மரபென்றற்குங், காதலியிழந்த நிலையுமென்றே ஒழியாது, பின்னுந் தபுதாரநிலையு மென்றார். தலைவர் வழி முறைத்தாரமும் எய்துவாராகலின் அவர்க்கு நிலையாமை சிறப் பின்மையின் ஆண்பாற் காஞ்சியின்றாயிற்று:

இது யாக்கையும் இன்பமும் ஒருங்குநிலையின்மையாம். காதலன் இழந்த தாபதநிலையும்-காதலனையிழந்த மனைவி தவம் புரிந்தொழுகிய நிலைமையானும்;

இருவரும் ஒருயிராய்த் திகழ்ந்தமையின் உயிரும் உடம்பும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம்.

இதனை இல்லறம் இழத்தலின் அறநிலையின்மையு மென்ப." உதாரணம் :

'அளிய தாமே சிறுவெள் ளாம்ப லிளைய மாகத் தழையா யினவே யினியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் அல்லிப் படுஉம் புல்லா யினவே' )جي تي سع قا 10 با(

என வரும்.

நல்லோள் கணவனொடு நளியழற் புகீஇச் சொல்விடையிட்ட பாலைநிலையும்-கற்புடைய மனைவி தன்கணவன் இறந்துபட அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து கூறிய புறங்காட்டு நிலையானும்;

எல்லாநிலத்தும் உளதாகித் தனக்கு வேறுநிலனின்றி வருத லானும் நண்பகல்போல் வெங்கனலான் வெதுப்புதலானும் புறங் காட்டைப் பாலை யென்றார்; பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு நிலையென்றார்.

1. இல்லறம் ழத்தலின் அறநிலையின் மையும் என்ப? என் * - வேண்டும், இழத்தலின் அறநிலையின் மையு - ன்றிருத்தல்