பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உஇ0 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பெயரத் தாய் தப வரூஉந் த லைப்பெயல் நிலையும்- பொருகளத்துப் பொருதுமாயும் பெருஞ் சிறப்பிற் lர்ந்து தன்மகன் புறங்கொடுத்துப் போந்தானாக, அது கேட்டுத் தாய் சாக்காடு துணிந்து சென்று மகனைக் கூடுங் கூட்ட மொன்றானும்; இனி அவன் பிறர் சிறப்பு மாய்தற்குக் காரண மாகிய பெருஞ் சிறப்பொடு களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி அவனோடு இறந்துபட வரும் தாயது தலைப்பெயனிலைமை யொன்றானும்:

இவ் விருகூறும் உய்த்துக்கொண்டுணர்த லென்னும் உத்தி,

நிலையென்றதனால் அவள் இறந்து படாது மீடலுஞ் சிறுபான்மை

யாம் காஞ்சி யென்றுகொள்க. அஃது அன்பிற்கு நிலையின்மை

  1. LiĩT L#,

"வாதுவல் வயிறே வாதுவல் ையிறே நோவே னத்தை நின்னின் றனனே பொருந்தா மன்ன சருஞ்சம முருக்கி யக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சா மெறிந்த வெஃக மதன்முகத் தொழிய நீயோந் தனையே யதனா, லெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த கல்லாக் காளையை யீன்ற வயிறே. *

(தகடுர் யாத்திரை, புறத்திரட்டு, மூதின்மறம்-கூ)

இத் தகடூர்யாத்திரை கரியிடை வேலொழியப் போந்ததற்குத் தாய்தபவந்த தலைப்பெயனிலை.

தொகை_இ ஈரைந்து ஆகுமென்ப-தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர்; நிறையருஞ் சிறப்பிற் றுறை இரண்டு உடைத்தே-ஆதலான் அக்காஞ்சி நிறுத்தற்கு எதிர் பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறை யும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து என்றவாறு.

எனவே முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென்பதுங் கூறினாராயிற்று. நிறையருஞ் சிறப்பென்றதனானே மக்கட்குந்

1. மாய்பெருஞ்சிறப்பிற் புதல் வற்பெயர' எனப் பாடங்கொண்டு நச்சி னார்க்கினியர் கூறும் பொருள் பெருஞ்சிறப்பின்’ என்ற அடை மொழியொடு முரணுகின்றது. புதல் வற்பயந்த’ என இளம்பூரணர் கொண்ட பாடமே தொல் காப்பியன1ர் கருத்துக்கு ஏற்புடிையதாகும்.