பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக உடுக.

12. தாமே யேங்கிய தாங்கரும் பையுளும்-போரில் ஊறு பட்டு ஒய்ந்தோர் தாங்களே பொறுத்தற்கரிய வருத்தங் கொண்டு ஏங்கும் துன்பக் காஞ்சியும்,'

(பையுள் - துன்பம்) இதில் தாமே என்பதை மனைவியர்மேல் ஏற்றி வேறு பொருள் கூறுவாரும் உளர். அது பொருந்தாமை வெளிப்படை.

13. கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்-கொழுநனொடு மாய்ந்த மனைவியின் மீச்செலவைக் கண்டு வழிச் செல்வோர் இரங்கிக் கூறும் மூதானந்தக் காஞ்சியும்;

"(1)......கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே, தென்னவன் கோப்பெருந்தேவி குறைத்தனள் நடுங்கிக்கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் றிணையடி தொழுது வீழ்ந்தனளே மட மொழி.’’

-சிலப்பதி, காதை உ0, வரி. எ.எ- அக இதில் கண்ணகி காட்டிய சான்றால் தான் குற்றமற்ற கோவ லனைக் கொல்வித்த தன் தவறுகண்டு நெடுஞ்செழியன் உயிர் துறக்க, அவன் பெருங்கோப்பெண்டும் அவனுக்குப் பின் இருக்கத் தரியாமல் உடன் உயிர் இழந்தது கூறும் மூதானந்தம் வருதல் காண்க

14. நளிைமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்-மிகப்பெரிய சுரத்திடைக் கொழுநனை யிழந்து தனியளாய் மனைவி யரற்றும் முதுபாலைக் காஞ்சியும்;

15. கழிந்தோர் தேஎத்துக் கழிபடருறிஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்-மாய்ந்தோர்மாட்டு அவருக்காக மிக வருந்தி மற்றையோ ரிரங்கும் கையறு நிலைக்காஞ்சியும்;

இதற்குக், 'கணவனொடு மனைவியரும் கழிந்துழி இறந்து படா தொழிந்த ஆயத்தாரும் விறலியரும் தனிப்படருழந்த செயலறு நிலைமை’ எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்; அது மற்ற மூதானந்தம் கையறுநிலைகளு ளடங்குதலின் ஈண்டுப் பொருந்தா

மையறிக.

3. 'மாய்பெருஞ்சிறப்பிற் புதல்வன் பெயர என நச்சினார் க்கினியர் கொண்ட பாடம் படையழிந்து மாறினன் என்று பிறர் கூற’ (புறம்-உன் அ) என வரும் புறப்பாடற்றொடரையடியொற்றிய புதிய பாடமெனவே தோற்றுகின்றது.