பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு உஇன்

விரிந்த இவ்வுலகத்தின் நில்லா இயல்பாகிய மரபு நன்கு விளங்க உலகத்தார் பலரும் மாய்ந்தொழியவும் தான்மட்டும் மாயாதுள்ள புறங்காட்டினை வாழ்த்துதலாகிய காடுவாழ்த்தோடு (பொருந்திய பத்தினையும் கூட்டி உணர்வோர்) உள்ளத்தை ஒருவழிப்பட நிறுத்தும் அருஞ்சிறப்பினையுடைய இருவகைத் துறைகளை யுடையது (காஞ்சித் திணையாம்) எ-று.

"மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை' என்பது முதலாகக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலை என்பது ஈறாகவுள்ள பத்துத் துறைகளும் இவ்வுலகில் அருஞ்சிறப்பினைப் பெறுதல் வேண்டும் என்னும் வேணவாவைப் புலப்படுத்துவன. பூசல் மயக்கம் முதலாகக் காடு வாழ்த்து ஈறாகச் சொல்லப்பட்ட பத்துத் துறைகளும் நில்லாத வுலகியலைப் பற்றியொழுகுந் துன்பியல் நிகழ்ச்சிகளைப் புலப்படுத்துவன. இவ்வாறு காஞ்சித் திணைக்குரிய துறைகள் மக்கள் உள்ளத்தை ஒருவழிப்பட நிறுத்தும் அருஞ்சிறப்பினையுடைய இருவகை நிலைகளைக் குறித்தலால், நிறை அருஞ்சிறப்பின் துறை இரண்டு உடைத்து' என்றார் ஆசிரியர். இவற்றுள் முற்கூறிய பத்தும் ஆண்பாற் று றை, பிற்கூறிய பத்தும் பெண்பாற்றுறை எனப் பகுத்துரைப்பர் நச்சினார்க்கினியர். இவ்விருவகைத் துறைகளையும் முறையே விழுப்பவகை எனவும் விழுமவகை எனவும் இருதிறமாகப் பகுத்து விளக்குவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். 20. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. இளம் : இது, பாடாண்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ஸ்) பாடாண் பகுதி கைக்கிளைப் புறன் - பாடாண் திணைப்பகுதி கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாம்; நாடும் காலை நால் இரண்டு உடைத்து-அஃது ஆராயும் காலத்து எட்டு வகையினை உடைத்து.

அவையாவன :-கடவுள் வாழ்த்துவகை, வாழ்த்தியல்வகை, மங்கலவகை, செவியறிவுறுத்தல் ஆற்றுப்படைவகை, பரிசிற்றுறை வகை, கைக்கிளைவகை, வசைவகை என்பன. அவையாமாறு முன்னர்க் காட்டுதும்.

அதற்கு இது புறனாயவாறு என்னை யெனின், கைக்கிளை யாவது ஒரு நிலத்திற்கு உரித்தன்றி ஒருதலைக் காமமாகி

یحیی-8 :حساس