பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினையியல் நூற்பா உ0 క్త, ఖీ

இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண் டிணையாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க."

பாரதியார்

கருத்து :- இது பாடாண் திணைக்கூறுகண் அகத்தில் கைக் கிளைத் திணைக்குப் புறனாகும் எனவும், பாடாண்திணை எட்டு வகைப்படும் எனவும் கூறுகிறது.

பொருள் :- இதன் பொருள் வெளிப்படை.

குறிப்பு :- புறத்திணைகள் ஏழனுள் முன்ஆறும் கூறிமுடிந்த தனாலும், எஞ்சிய பாடாண் ஒன்றே இதிற் கூறப்படுதலானும், பிறவற்றுள் ஒவ்வொன்றைப் பிரித்துக் கூறிய முன் சூத்திரங்களிற் போலத் தானே' என்னும் பிரிநிலைச் சொற்குறிப்பு ஈண்டு வேண்டாதாயிற்று. புறனே...உடைத்தே, என்பவற்றின் ஏகாரம்

அசிை.

மற்றத்திணைகள் போலத் தனக்கொரு தனிநிலைபெறாமல் பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு ஏற்றவிடத்தசை ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாய் அமையுமதனியல் கருதிப் "பாடாண் பகுதி' எனச் சுட்டப்பட்டது. வெட்சிப்பாடாண், வஞ்சிப்பாடாண், உழிஞைப்பாடாண், தும்பைப்பாடாண், வாகைப்பாடாண், காஞ்சிப்பாடாண், புரைதீர்காமம் புல்லிய பாடாண் என்றெழு வகையிற்பாடாண் பிறத்தலின், அவ்வத் திணைப்பகுதி நீக்கிப் புகழ்ச்சிக்குரிய ஒவ்வொருபகுதியே பாடானாமென்பது விளங்கப் பாடாண் எண்ணாமற் பாடான் பகுதி எனத் தெளிக்கப்பட்டது. பாடாண் வகை ஒவ்வொன் றினும் அத்திணைப்பகுதி பிரித்துப் பாடாண் பகுதியை ஆய்ந்தறிய வேண்டுதலின், 'நாடுங் காலை' எனக் கூறிய குறிப்பும் தேர்தற் குரியது. நாவிரண்டெனக் குறிக்கப்பட்டவை, பாடாண்திணை வகைகள். அவற்றின் விளக்கம் பின், 'கொடுப்போரேத்தி' எனும் சூத்திரத்தில் கூறுகிறார்; அதையடுத்துத் தாவி னல்லிசை எனுஞ் சூத்திரத்தால் பாடாணின் துறைகளை விளக்கு கிறார். முன், உழிஞைக்கு முதலில் அதன் வகை கூறிய பிறகு அதன் துறைகளை விளக்கியது போலப் பாடாண் துறைகள் பின் எட்டி

1. புலவரகற் பாடப்பெறும் நிலையில் எல்லாத் திணையும் பாடாண் ஆதற்கு ஒத்தன வாயினும், பாடும் புலவன் ஒரு பொருளை நச்சிய குறிப்புடன் பல திணை துறைகளும் விாவி வரப் பாடப் பெறும் பாடல்கள் பாடாண் தினையாம் என்பதும் பதிற்றுப் பத்துப் பாடல்கள் நூறும் இம்முறையிற் பாடிப் பெற்றனவே என்பதும் நச்சினார்க்கினியர் கருத்தாகும், .