பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2-g a一 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

றந்தன கூறுதலானும், அவற்றை இதில் எட்டெனச் சுட்டுதலமை யாதாகலானும், இத்திணை வகை எட்டே பின் விரிப்பதானும், இதில் எட்டு எனுமெண் துறைத்தொகையென நச்சினார்க்கினியர் கொண்டது பொருந்தாதென்க. இனிப் புறத்திணை ஆறும், அன்பினைந்திணை கைக்கிளையாம் அகத்திணைகள் இரண்டு மாகப் பாடாண் பிறக்கும் வகை எட்டெனினுமமையும்."

இனி, கைக்கிளையிற் காதற்சிறப்பு ஒருவர்க்கேயாவது போலப் பாடாண் சிறப்பும் பொதுமையின்றித் தகவுடையார் ஒருவருக்கே உரித்தாக வருதலானும், கைக்கிளையில் காதற் கூற்றுப் பாராட்டுந் தலைவன்மாட்டாவதுபோற் பாடாண் கூற்றும் புகழ்வோர்தம் பக்கலிலே யமைதலானும், இரண்டி னுக்கும் நிலம் பொழுது வரையறை இன்மையானும், கைக்கிளையி லிழுக்கு நீக்கித் தருக்கியவே' சொல்லி யின்புறுதல் போலப் பாடாணில் பழிதழுவாப் புகழ்மையொன்றே பயில்வதானும், இரு திணையு மொரு தலையாச் செந்திறமாயமைதலானும், பாடாண் கைக்கிளைக்குப் புறனாயிற்று. ஆய்வுரை

.0تاسع ، قة نب والي

இது பாடாண்திணையாமாறு உணர்த்துகின்றது.

(இ-ள்) பாடாண்திணைப்பகுதி கைக்கிளை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். அஃது ஆராயுங்காலத்து எட்டு வகை யினை யுடையதாகும். எ-று.

புறத்திணையுள் ஏழாவதாகச் சொல்லப்படும் பாடாண் என்பது, புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர் களாற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்பாடும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு

1. பாடாண்டினை என்பது தனக்கெனத் தனிநிலை பெறாது வெட்சி முதலிய பிற தினைகளை நிலைக்களனாகக் கொண்டு வெட்சிப் பாடாண், வஞ்சிப் பாடாண், உ திஞைப் பாடாண், தும்பைப் பாடாண், வாகைப் பாடாண், காஞ்சிப் பா டாண், புரை தீர்காமம் புல்லிய பாடாண் என அவற்றின் பகுதியாய் வரும் சார்புநிலைத் திணையாதவின் பாடாண் பகுதி எனப்பட்டது. மேற்குறித்த எழுபகுதிகளுடன் ஒருவரை இயல்பாக முன்னிலைக்கட்பரவலும் படர்க்கைக்கண் புகழ்தலும் கருதிய பகுதியாகிய செந்துறை வண்ணப் பகுதியையும் சேர்த்து எண்ணப் பாடாண்டிணை எட்டுவகைப் படுதல் காண்க. இனி, பாடாண்பகுதி எட்டு என்பதற்குப், புறத்திணை ஆறும், அன்பின் ஐந்திணை யும் கைக்கிளையும் ஆம் அகத்தினைகள் இரண்டுமாகப் பாடாண் பிறக்கும் வகை எட்டெனினும் அமையும் என்பர் நாவலர் பாரதியார். புரை தீர் காமம் புல்லியவகை என்பதனுள் கைக்கிளையடங்கு மாதலானும் பரவலும் புகழ்ச்சியுமாகிய செந்துறை வண்ணப் பகுதி இத்தொகையில் அடங்காது விடுபடுமாதலானும் இத்தொகை விளக்கம் ஏற் புடையதாகத் தோன்றவில்லை. - -