பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


? - Gf. G- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

யாகும் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். பாடாண் அல்லாத பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே எனினும், புலவ ராற் பாடப்றுெதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்பின்றி ஒருவர்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைப் புலப்படுத்தும் திறத்தால் அவை வெட்சி முதலிய திணைகளின் பாற்படும் எனவும், அச்செயல்களைக் கருவாகக்கொண்டு புலவர் பாடும்போது அங்ங்ணம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளக்குறிப்பு பாடாண்திணையாம் எனவும் பகுத் துணர்தல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும் உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் வண்ணம் ஆற்றல்மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க மனைவாழ்க்கை யிலும் புகழுடன்வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற்றன்மையே பாடாண் திணையென்றல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

பாடாண் திணையின் எண்வகைகளும் அடுத்துவரும் இரண்டு நூற்பாக்களில் விரித்துரைக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

இனி, பாடாண்திணையின் எண்வகையாவன:

கடவுள் வாழ்த்துவகை, வாழ்த்தியல் வகை, மங்கலவகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை வகை, பரிசிற்றுறைவகை, கைக் கிளை வகை, வசைவகை எனப் பகுத்துரைப்பர் இளம்பூரணர். பாடாண்டிணைக்கு ஒதுகின்ற பொருட்பகுதி பலவுங்கூட்டி, ஒன்றும், நிரைகவர்தல் நிரைமீட்டல் என்னும் வெட்சி வகை இரண்டும், பொதுவியல் வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பனவும் ஆக இவை எட்டும் பாடாண்திணைவகை என்பர் நச்சினார்க்கினியர். இனிப் புறத்திணைவகை ஆறும் அன்பின் ஐந்திணை கைக்கிளையாகிய அகத்தினை இரண்டும் ஆக இவ்வெட்டும் பாடாண்திணையின் வகை யெனினும் அமையும் என்பர் நாவலர் பாரதியார்.

ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையின் வகையாகத் தாம் கூறும் தொகையினைத் தாமே விரித்துக் கூறுதலை வழக்க மாகக் கொண்டுள்ளார் என்பது, உழிஞை இருநால்வகைத்து (புறத்-கூ) எனக்கூறிய அவர் கொள்ளார் தேஎம் குறித்த கொற் றமும் முதலாக ஆரெயில் ஈறாகச் சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே என அவ்வகைகளை விரித்துக் கூறியுள்ளமையால் நன்கு புலனாம். அவ்வாறே பாடாண்திணை ‘நாலிரண்டு டைத்தே எனக் குறித்த தொல்காப்பியர் தாம் சுட்டிய நாலிரு