பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ఓ జి; శr தொல்காப்பியம்-பொருளதிகாரம்- உரைவளம்

நச்சர்:

2. அத்

இது முன்னர் எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத் தன் பொருட்பகுதிகள் எல்லாங் கூடிஒன்றாமென்ற பாடாண்டிணை தேவரும் மக்களுமென இருதிறத்தார்க்கே உரிய என்பார் அவ்விரண்டினுள் தேவர் பகுதி இவையென்ப துணர்த்து கின்றது."

(இ - ள்) அமரர்கண் முடியும் அறுவகையானும்-பிறப்பு வகையானன்றிச் சிறப்புவகையால் தேவர்கண்ணே வந்து முடித லுடையவாகிய அறுமுறை வாழ்த்தின்கண்ணும்; புரைதீர் காமம் புல்லிய வகையினும்-அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள் களை வேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக் கண்ணும்; ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப-மேற் பாடாண் பகுதியெனப்பகுத்துவாங்கிக் கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களுமெனப் பகுத்த இரண்ட இறுள் தேவர்க்கு உரித்தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்குவரு மென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு.

அமரர்கண்ணே வந்து முடியுமெனவே அமரர் வேறென் பது உம் அவர்கண்ணேவந்து முடிவன வேறென்பதுTஉம் பெற்றாம். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம். இவை தத்தஞ் சிறப்பு வகையான் அமரர் சாதிப் பா வென்றல் வேதமுடிவு. இதனானே பிறப்புமுறையாற் சிறந்த அமரரை வாழ்த்தலுஞ் சொல்லாமையே முடிந்தது; தந்திர வுத்தி வகையான். வகையென்றதனானே அமரரை வேறு வேறு

இங்குப் பாடாண்திணையா தற்குப் பொருந்தும் என்பதுபட ஒன்றன்பகுதி ஒன்றும் என்றார் தொல்காப்பியனார் என்பதும், இன்னும்?? புரை தீர் காமம் புல்லியவகையினும் ஒன்றன் பகுதி என்ற அதனான், .ணர்தல் முதலாகிய ஐவகை உரிப்பொருளினும் ஊடற்பொருண்மை பா.ாண்பகுதிக்குப் பொருந்தும் என்பதும், ஒன்றன்பகுதி என்ற இதனானே இயற்பெயர் சார்த்திவாராது பாட்டு டைத்தலைவனது நாடும் ஊரும் இதுவென விளங்க ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினால் காமக் குறிப்புப் பற்றி வரும் ஒரு கூறும் பாடாண்பாட்டாகும் என்பதும் இளம்பூரணர் தரும் விளக்கமாகும்,

1. வெட்சி, பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் ஏழுடன் பாடாண்தினைக்கு ஒதுகின்ற பொருட்பகுதி பலவும் சேர்ந்த ஒரு பகுதியும் எனப் பாடாண் பகுதி எட்டு எனக்கொண்ட நச்சினார்க்கினியர், அவ்வெட்டினுள் பாடாண்டினைக்கு ஒதுகின்ற பொருட்பகுதி பலவுங்கூடிய ஒன்றினைத் தேவர்பகுதி, மக்கட்பகுதி என இரண்டாகப் பகுத்து, அவ்விரண் டனுள் தேவர்க்கு உரித்தாகும் பகுதியெல்லாம் தொகுத்துக்கூறுவது இச்சூத்திரம் எனக் கருத்துரை வரைந்துள்ளார்.

2. அமரர்கண்முடியும் அறுவகை எனவே, பிறப்பு முறையாற் சிறந்த அமரர் வேறு, சிறப்பு வகையால் அமரர் சாதியுட் சேர்த்துரைக்கப்படும் அறுவகை யாகிய முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு என்பன வேறு எனக்கொண்டார் நச்சினார்க்கினியர்.