பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/287

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உக o- or of

பெயர் கொடுத்து வாழ்த்தலும் ஏனைப் பொதுவகையாற் கூறி வாழ்த்தினன்றிப் பகுத்துக் கூறப்படாமையுங் கொள்க. புரை, உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத காமமாவது மறுமைப்பயன் பெறுங் கடவுள் வாழ்த்துப்போல் உயர்ச்சியின்றி இம்மையிற் பெறும்பயனாதலின், இழிந்த பொருள்களிற் செல்லும் வேட்கைக் குறிப்பு. புல்லிய வகையாவது, அம் மனக்குறிப்புத் தேவர் கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன்பொருட் டானும் ஆக்கத்து மேல் ஒருவன் காமுற்றவழி அவை அவற்குப் பயன் கொடுத்தலாம். இது ஒன்றனுடைய பகுதியென்க. இத் துணைப் பகுதியென்று இரண்டிறந்தன எனக் கூறாது, வாளாதே பகுதியென்றமையில் தேவரும் மக்களுமென இரண்டேயாயிற்று: அத்தேவருட் பெண்டெய்வங் கொடி நிலைகந்தழி என்புழி அடங் கும். மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையிற்’ செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ’ (புறம்-கட) என்றாற்போலச் சிறுபான்மை ஆண்மக்களோடுபடுத்துப் பாடுப. வகையென்றதனான் வாழ்த்தின் கண் மக்கட்பொருளும் உடன்றழுவினும் அவை கடவுள் வாசித்தா மென்று கொள்க.

தொகைகளிலுங் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த் தெல்லாம் இதன்கண் அடக்குக.

இனி அறுமுறை வாழ்த்து வருமாறு:

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டி விடும்’ (குறள்-நீத்-அ) ' கெடுப்பது உங் கெட்டார்க்குச்சார்வாய்மற் றாங்கே யெடுப்பது உ மெல்லா மழை" (குறள்-வான்-டு) “நாகின நந்தி யினம்பொலியும் போத்தென வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப வாயர் அகன்றார் சுரைய கறந்த பால் ர்ேசிறந்த வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர் மெல்லக் கடைவிடத்து நெய்தோன்று நெய்பயந்து நல்லமு தன்ன வளைய கு நல்ல

1. புரை என்பதனை உயர்வு என்ற பொருள் தரும் உரிச் சொல்லாகக் கொண்டு புரை நீர் காமம்’ என்பதற்கு உயர்ச்சியற்ற இழிந்த) பொருள்களிற் சொல்லும் வேட்கைக் குறிப்பு எனப் பொ ருள்கொண்டார் நச்சினார்க்கினியர்.

2. மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையின்’ என நச்சினார்க் கினியர் குறித்தது, ஒருவன் ஒருபெண்ணின் பெருமையை அவளை மட்டும் தனித்துப்பாடுதல் மரபன்று; பாடவேண்டுமானால் அவள் கணவனொடு சார்த் தியே பாடுதல் முறை என்னும் தமிழக சமுதாய மரபினை வற்புறுத்துங் கருத்தின தாகும. -