பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总_安、 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

புனித.மு. மெச்சிலு நீக்கித் துணியின்றி யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற் காசார் புறவிற் கலித்த புதர்மாந்தி யாவா ழியரோ நெடிது’’

ஏனைய வந்துழிக் காண்க.

"புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங் கரிமான் பீடத் தரசுதொழ விருந்து பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருந் தாமு மிகலின்று பெறு உந் துகளில் கற்பின் மகளிகொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர் வாய் பரவதின் னறங்கெழு சேவடி காப்ப வுறந்தையோ டுழி ஆழி வாழி யாழி மாநில மாழியிற் புரந்தே'

இது கடவுளை வாழ்த்தி ஒழியாது தனக்குப் பயன்படுவோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்துதலின் புரைதீர்காமம் புல்லிய வகை யாயிற்று. (உசு)

பாரதியார்

கருத்து: இது, பாடாண் திணை இயல் விளக்குகிறது.

பொருள் : அமரர்கண் முடியும் அறுவகையானும்-போர் மறவர் (அஃதாவது பொருநர்) பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சியிறான புறத் திணை வாகையாறினும் (புரை தீர்காமம் புல்லிய வகையினும்) குற்றமற்ற அகப்பகுதியில் அன்பளைந்த காதல் திணைவகையி னும்; ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப அவ்வெழு வகைத் திணை களுள் இயல்பாக இதற்கேற்புடைய ஒவ்வொன்றின் கூறே பாடானாய் அமையும் என்று கூறுவர் புறநூற் புலவர்.

1. 'அமரர்கண் முடியும் அறுவகையானும்’ என வரும் இத்தொடர்க்கு நாவலர் பாரதியார் கூறும் இப்பொ ளே தொல்காப்பியனார் கருத்துக்கு இசைந்த உண்மைப் பொருளாதல் கூர்ந்துணரத்தகுவதாகும்.