பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உக 2 3 శ్రీః

குறிப்பு : தனிநிலை பெறாமல், பிற திணைகளை நிலைக் களனாகக் கொண்டு அவ்வவற்றில் புகழ்மைக்கேற்ற பகுதியே பாடாணாயியையுமென்பதை மேற்குத்திரத்தில் 'பாடாண் பகுதி' எனச்சுட்டி, இதில் அதன் தன்மை தெளிய விளக்கப்பட்டது. மேற் கூறி முடித்த ஆறு புறத்திணைப் பகுதிகளிலும், அகத்திணை வகைகளுள் புகழ்மையொடு பொருந்தாப் பெருந்தினை போன்ற பழிபடும் இழி காமவகை விலக்கித் தூய காதற்பகுதிகளிலும், புகழ்மை பாராட்டுதற்கேற்ற கூறு பாடாண் எனப்பெறும். (பாடாண்-பெருமை. அஃதாவது பீடு) அவ்வத்திணைப் பொருளின் மேல் அதிற் சிறந்த ஒருவரின் புகழ் பாராட்டும் பகுதியளவே பாடாணாகும். சிறப்பெதுவும் புகழ்க்குரிய யாதாமோரொழுக்கம் பற்றியன்றி அவ்வத் திணைப் புறத்துப் பிறத்தலே இயல்பாகும். ஆதலின், பாடாண் பிற திணைகளின் சார்பாய்ப் புகழ்மைப் பொருட்டாயமைதல் வெளிப்படை. இனி, அகப்புறத் திணை களனைத்தும் மக்கள் ஒழுக்கம் பற்றியவையாதலின் பாடானும் மக்கட்குரியதேயாதல் வேண்டுமாதலானும், பண்டைச் சான்றோர் பாடாண் பாட்டுக்களெல்லாம் மக்களில் தக்கார் மாண்புகழாகவே வருதலானும், சூத்திரவைப்பு முறையில் தொல்காப்பியரின் மாறாத நியமப்படி இது பாடாணியல் விளக்கம் கூறவேண்டும் சூத்திரமாதலானும், சூத்திரச் சொற்போக்கால் தொல்காப்பியர் கருத்தறிதல் உரையறமாதலானும், சூத்திரச் செம்பொருளிது வாதல் ஒருதலை.

இனி, இச்சூத்திரச் சொற்பொருளை வைப்புமுறையில் இடத்திற்கியையக் கொள்ளாமல் முன்னுரைகாரர் முரண்படத் தத்தம் விருப்பின்படி வெவ்வேறாய்க் கூறுவர். அவருரை நெடு வழக்கால் புலவரை மருட்டுதலால், மெய்ப்பொருளறிய அவருரைப்பெற்றி யாராய்தலும் பொருத்தமாகும்.

இதற்கு இளம்பூரணர் உரையாவது: 'அமரர்கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புல வராற்றுப்படை புகழ்தல் பரவல் என்பனவற்றினும், குற்றத்தீர்ந்த (ஐந்திணை தழுவிய அவற்றின் அகமான) காமத்தைப் பொருந்திய வகையினும். அவற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண்டிணை யாதற்குப் பொருந்தும்' என்பதே.

"கொடிநிலை முதலிய ஆறும், கடவுட்புகழ்ச்சியன்றிப் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல், காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல், என்ற இவ்விரு