பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


岛捡 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

புறத்திணை ஏழும் முறையே, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர் பெறும். இவை நிரலே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை கைக்கின்ள என்னும் அகத்திணைகளுக்கு இயலியைபுடைமை கருதி அவ்வவற்றிற்குப் புறமாயமைவனவாய்க் கொள்ளப்பட்டுள. அவ்வமைதி அவ்வத் திணைச்சூத்திரத்தின் கீழ் விளக்கப்படும். அகத்திற்போல, புறத்தும் திணைகளை ஏற்ப அவ்வவ்வொழுக் கத்திற் சூடும் மாலை அல்லது அடையாளப் பூவாற் பெயரிட் உழைப்பது அடிப்பட்ட தமிழ்நூன்மரபாகும். இம்முறையே இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆகோளாம் வெட்சித் திணைவகையும், நான்கு, ஐந்து-ஆம் சூத்திரங்களில் ஆகோளைப் போலவே குறிஞ்சிப் புறனாய்ப் போர் துவக்கும் வெட்சியொழுக்க மாகும் கொடிநிலை - கொற்றவை நிலை-என்பனவும் பிற வெட்சித் துறைகளும் கூறப்படுகின்றன. வெட்சி, போர்துவங்கு முன் பகைவர்க்கறிவிப்பதுபோல் அது பகைவர் நாட்டு ஆனிரை களைக் களவிற் கொள்ளும் ஒழுக்கமாகும். போர் துவங்கிய பின் ஆகோள் கொண்டியாவதன்றி வெட்சியாகாது. அடையலர்க்கு அமர்க்குறிப்பறிவித்துப் படைதொடச் செய்து அவர்மேற் செல்வதே போரறமாதலின், அமரறிவிப்பான் பகைப்புலத்து ஆகோடலைப் போர் தொடங்கும் மரபாக் கொண்டனர். பண்டைத் தமிழரும் பிறரும் பண்டைக் காலத்தில்.

களவில் ஆகொளவரும் முனைஞரைத்தடுத்து நிரை காவலர் மீட்க முயல்வதும், அவரொடு நிரைகொள்வார் பொருவதும் வேறு திணையாகாமல் ஆகோளின் இடை நிகழ்ச்சிகளாயடங்கும் இயல் கருதி அவற்றை அனைக்குரி மரபிற் கரந்தை' என வெட்சித் துறைகளில் அடக்குவர் தொல்காப்பியர். அதுபோலவே போர்த் தொடக்கமாம் கொடிநிலை, கொற்றவை நிலை போல் வனவற்றையும் பிற பல துறைகளையும் வெட்சியி லடக்கிக் கூறினர். அவ்வாறு போர்துவக்கும் ஒழுக்கவகைக ளனைத்தும் வெட்சியெனப்பட்டு, மறனுடைமரபின் அமரறத்தொகுப்பாம் புறத்திணைவகையுள் முதற்கண் கூறப்படுகின்றன’

1. கொண்டி-கொள்ளை; போர் தொடங்கியபின் பகைவர் நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்தல் கொள்ளையடித்தலாகிய குற்றமாகுமேயன்றி அற முறைப் கடி போர் தொடங்குதலாகிய வெட்சித்திணையாகாது என்பது கருத்து.

2. இவ்விளக்கம் தொல்காப்பியர் கருத்துக்கு ஏற்புடையதாகும்,