பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఓ. ళ శ్రీ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஆய்வுரை

நூற்பா உக இது பாடாண்திணைக்குரியவாக முற்குறித்த எண்வகை களுள் ஏழினை விரித்துரைக்கின்றது.

(இ-ள்) அமரகத்து அஞ்சாது போர்புரியும் வீரர்களின் தொழிலாய்ப் பொருந்தும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பவற்றைப் பொருளாகக்கொண்டு பாடப் பெறும் அறுவகைத் திணைப்பகுதிகளும், குற்றமற்ற அகத்திணை யொழுகலாற்றைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் காமப் பகுதியும் ஆகிய இவ்வெழுவகைகளும் பாடாண்திணையின் ஒரு சார் பொருட்கூறுகளாகப் பொருந்தும் என்பர் ஆசிரியர்.

இவ்வேழும் உலக வாழ்க்கையிற் பலர்க்கும் உரிய வாழ்க்கைக் கூறுகளாதலின் முதன்மையுடைய, இக்கூறுகளை ஒன்றன்பகுதி' என முதற்கண் எடுத்துரைத்தார். 'அமரர் என்னுஞ்சொல், அமர் என்பதன் அடியாகப் பிறந்த பெயராய்ப் போரியற்றலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் படைமறவரைக் குறித்து வழங்கும் தனித்தமிழ்ச் சொல்லாகும். இந்நுட்பம்,

'எமகனாயின் இறைகொடுத்தகல்க அமரனாயின் அமைவொடு நிற்க'

எனவரும் பெருங்கதைத் தொடரால் இனிது புலனாதல் காண லாம். படை வீரரைக் குறித்த அமரர் என்னும் இச்சொல், அம் மறவர் போர்க்களத்து உயிர்கொடுத்து விண்ணுலகெய்திய நிலை யில் கல்நிறுத்தித் தெய்வமாக வைத்துப் போற்றப்பெறும் நிலை யினையடைந்த பின்னர்த் தேவர் என்ற பொருளிலும் வழங்கப் பெறுவதாயிற்று. அமரர் என்னும் இச்சொல்லுக்குத் தேவர் எனப் பொருள்கொண்ட ஐயனாரிதனாரும் இளம்பூரணரும் அமரர்கண் முடியும் அறுவகையாவன: கொடிநிலை, கந்தழி, வள்ளி. புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என விளக்கம் தருவர். பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலையுடைய முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்னும் பொருள் பற்றிய அறுமுறை வாழ்த்து எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். வானவர், அந்தணர், ஆணினம், டிழை, அரசன், உலகம் என்னும் ஆறுபொருள்களையும் வாழ்த்துதலே அறுமுறை வாழ்த்தாகும். ஆளுடைய பிள்ளையார்