பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உஉ உ எடு

அருளிய வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’ எனவரும் திருப்பாசுரத் திருப்பாடல் அறுமுறை வாழ்த்துக்கு அமைந்த தொன்மை இலக்கியமாதல் உணரத்தகுவதாகும்.

போர்மறவர்பாற் சென்று அமைவனவாக இப்புறத்திணை யியலில் விரித்து விளக்கப்பெற்ற வெட்சி முதல் காஞ்சியிறான புறத்தினையொழுகலாறுகள் ஆறினையும் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அறுவகைப்பகுதிகளே அமரர்கண்முடியும் அறுவகை யெனப்பட்டன என்பர் நாவலர் சோமசுந்தர பாரதியார், இவ்விளக்கமே தொல்காப்பியனார் கருத்துக்கும் சங்கச் செய்யுட் களின் திணை துறையமைப்புக்கும் பொருத்தமுடையதாக அமைந்துள்ளமை உணர்ந்து பாராட்டத்தகுவதாகும்.

22. வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇப்

பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே.

இளம் o இது, சில பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த் துதல் துதல் மு.

(இ.ஸ்) வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇ பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்-மேற் சொல்லப்பட்டன, வழக்கு இயலும் பக்கத்து வகைபெற நிறுத்திப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பக்கத்தினும், முன்னோர் கூறிய குறிப்பினும்-முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பினும், செந்துறை வண்ணம் பகுதி வரைவு இன்று ஆங்கு-செந்துறைப்பாட்டின் கண் வரும் வண்ணப்பகுதி வரைதல் இல்லை அவ்விடத்து.

குறிப்பு என்பது காமம் ஆமாறு வருகின்ற சூத்திரத்துள் ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ (புறத்திணை. உங்.) என ஒட்டி எழுந்தமையான் உணர்க."

இதனாற் சொல்லியது, தேவபாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத் தமிழில் வரைந்து ஒதினாற்போலச் செந்துறைப் பாட்டிற்கு உரிய செய்யுள் இவை என்று உரைத்தல் இல்லை

1. முன்னோர் கூறிய குறிப்பு என் -- * - - - - । : றது முதலாகிரியர் கூறிய காமக் ப்பு. இனாலன்றிக் குறிப்பினாற் புலப்படுத் தற்குரியது காமமாதலின் :: குறிப்பு என்பதற்குக் காமக்குறிப்பு’ எனப் பொருள்கொண்டார் இளம்பூரணர் எனக் கருதவேண்டியுளது. - £bTÇ