பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ధT தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

பாடாண்டாட்டின்கண் வருங் காலத்தென்பது. எனவே எல்லாச் செய்யுளும் ஆம் என்றவாறு."

இனி, புகழ்தல் படர்க்கைக்கண்ணும், பரவல் முன்னிலைக் கண்ணும் வருமாறு:

'கண்ணகன் ஞாலம் அளந்தது உம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்தது உம்-நண்ணிய மாயச் சகடம் உதைத்தது உம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.”

(திரிகடுகம். கடவுள் வாழ்த்து) இது புகழ்தல்.

‘‘வைய மகனை அடிப்படுத்தாய் வையகத்தார் உய்ய உருவம் வெளிப்படுத்தாய்-வெய்ய அடுத்திறல் ஆழி அவணையாய் என்றும் நெடுந்தகை நின்னையே பாம். (புறப் பாடாண்-க.)

இது பரவல்.

'வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் சேறி நெறிகொள் படிவத்தோய் நீயும்-பொறிகட்கு இருளியும் ஞாலத்து இடகெல்லாம் நீங்க அருளியும் ஆழி யவன்.' (புறப் பாடாண்-ச.உ)

இது புலவராற்றுப்படை.

'மாயவன் மாயம் அதுவால் மணிநிசையுள் ஆயனா எண்ணல் அவனருளான்-காயக் கழலவிழக் கண்கலைக் கைவளையார் சோரச் சுழலழலுள் வைகின்று சோ.' (புறப் பாடாண்-ச0)

இது கந்தழி.

‘'வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே ஈண்டியம் விம்ம இனவளையார்-ஆண் தயங்கச் சூலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு வேலனோ டாடும் வெறி.” (புறப். பாடாண்-சந்}

தெய்வத்தை முன் னிலையாக்கிப் போற்றும் தேவபாணிப்பாடலும் அகத் தினையொழுகலாற்றைப் புனைந்து பாடும்பாட்டும் இசைத்தமிழில் இன்ன இன்ன செய்யுளிற் பாடப் பெறும் எனச் செய்யுளியலில் ஆசிரியர் வரையறுத்துக் கூறியுள்ளார். அவற்றைப் போன்று செந்துறைப்பாடாண்பாட்டு இன்ன இன்ன செய்யுளிற் பாடப்பெறும் என ஆசிரியர் வரையறுத்துக் கூறாமையால் செந்துறைப் புாடாண்பாட்டிற்கு எல்லாச் செய்யுளும் ஆம் என்பது இளம் பூரணர் கருத்தாகும்.

2. தலைவனை முன்னிலைக்கண் பாடிப் போற்று தலைப் பரவல் எனவும், பிடர்க்கைக்கண் பாடிப்போற்றுதலைப் புகழ்தல்' எனவும் பகுத்து விளக்குவர் இளம்பூரினர்.