பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/298

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. அ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

வரைவின்று-அச்செந்துறைக்கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கு நிலைமையின்று என்றவாறு.

பரவல் முன்னிலைக்கட் பெரும்பான்மை வரும், பரவலும் புகழ்ச்சியும் தலைவன்கண்ணவாய்ப் பரிசில் பெறுதல் பாடுவான் கண்ணதாகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குப் புறனா யிற்று. முன்னோர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன்கண் வேட்கையின்மையிற் கைக்கிளையாம் குறிப்பென்றார், அறம் பொருள் இன்பம் பயப்பச்செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதிபயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறை யாவது விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண்பாட்டெனப் படும்.

“வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா (பத்துப்குறிஞ்சிப்-க.க) என்பவாகலானும் ஐவகை நிறத்தினையும் வண்ண மென்பவாகலானும் வண்ணமென்பது இயற்சொல்: வருண மென்பது வடமொழித்திரிபு."

ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்றெனவே வருகின்ற காமப் பகுதியிடத்து வண்ணப்பகுதி வரையப்படுமாயிற்று. கைக்கிளைக் கிழத்தியை உயர்ந்தோன் வருணத்துப்படுத்துக் கூறாதது, ‘அனைநிலை (தொல் - புறத்திணை-உo) வருணப்படுத்துத் தோன்ற க்கூறலின்.

உதாரணம்:

'நிலநீர் வளிவிசும் பென் ற நான்கி னளப்ப ரியையே படையே ருழவ பாடினி வேந்தே யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டதின் மூன்றிணை முதல்வர் போல நின்று நீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅ லியசோவில் வுலகமோ டுடனே. (பதிற்றுப்.கச)

1. செந் துறை வண்ணப்பகுதி' என்றது, புனைந்துரை வகையால் மிகை பட உயர்த்துப் புகழாது ஒருவர்க்கு இயல்பாக அமைந்த நலன்களை இசைபடப் புகழ்ந்தேத்தும் பாடாண்பாட்டாகும். -

" வண்ணம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு வருணம் என்ற வடசொற் பொருளை ஏற்றியுரைத்தல் முறையன்று.

செந்துறை மார்க்கம்-இசைத் துறைப்பாடல் வெண்டுறைமார்க்கம்-நாடகத்துறைப் பா.ல்,