பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தி ) தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

பாரதியார்

கருத்து ;-இது, சில பாடாண் துறைகளில் இயற்பாவிடத்துப் பயிலும் இசைப்பா வகை கூறுகிறது.

பொருள் :-வழங்கியன் மருங்கில்.பல திணைப்பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து வகைபட நிலைஇ அதனதன் கூறுபட நின்று: பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் வாழ்த் தலும் புகழ்தலும் நுதலுமிடத்தும்; முன்னோர் கூறிய குறிப்பி னும்-பண்டைச் சான்றோர் செந்துறை வழக்குச் சுட்டும் பிற விடத்தும்; செந்துறை வண்ணப்பகுதி வரைவின்று-இயற்பாக்களே யன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படா.

குறிப்பு :-"ஆங்கு உரையசை,ஏகாரம்,ஈற்றசை உம்மைகள் எண் குறிப்பன. செந்துறையாவது, இசைத் தமிழ்ப்பாட்டு வகை. வண்ணம் என்பது இசைக்குரிய ஓசை வேறுபாடு, பிற திணைகளிற் போலப் பாடாணிலும் இயற்பாக்கள் பெரிதும் வழங்கும்; எனில், இங்குக் குறித்த சில பாடாண் வகைகளுக்கு மட்டும் இயற் பாக்களேயன்றி இசைப்பா வண்ணக்கூறுகளும் வந்து பயில்வது முண்டு என்பதே இச்சூத்திரக் கருத்தாகும். அது, வண்ணப் பகுதி வரு'மெனக் கூறாது, வரைவின்று' என்றதனால் விளங் கும். பாடாணில் பெரிதும் பயில்வன இயற்பாக்களே இசைப்பா வண்ணவகை சிறுவரவிற்கே; அதுவும் இங்குக் குறித்த வகைகளில் மட்டுமேயாம். இதில் முன்னோர் கூறிய குறிப்பென்றது, பரவலும் புகழ்தலுமல்லாப் பிற துறைகளை குறித்த அவ்விரண்டிலும் செந்துறை வண்ணம் சிறப்புடைத்தாகும்; மற்றைய பாடாண் துறைகளில் பண்டைச் சான்றோர் செந்துறைக்குரியவெனக் குறித்தவற்றிற்கே இசைப்பா வண்ணம் ஏற்புடைத்து; அல்லன. வெல்லாம் இயற்பாக்களே ஏற்குமென்க.

புகழ்ச்சிப் பாடாண் வகைக்கு ஒழுகு வண்ணச் செந்துறைப் பாவகை வருமாறு:

'அட்டா னானே குட்டுவன்; அடுதோறும் பெற்றா னாரே பரிசிலர் களிறே; வரைமிசை யழிதரு மருவியின் மாடத்து வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவில் சொரிகரை கவரும் தெய்வழி புராலிற் பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல நன்னுதல் விறலிய சாடுந் தொன்னகர் வஒரப்பின னுரையா னாவே...'

-பதிற்றுப்பத்து, செய்-ச.எ