பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2- 912. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

சான்று. சொற்றொடர் சுட்டும் செம்பொருளை இவரே குறிக் கின்றார். அதைக் கொள்ளாமைக் கிவர் இரட்டேதுக்கள் கூறுகிறார்.

1. இதிற்குறித்த பாடாண் பகுதிகள் செந்துறை மார்க்கத்து வண்ணப் பகுதியாகிய பாடல்பற்றி வரும் என்பது...கூறின், அவை

ஈண்டுக் கூறல் மயங்கக் கூறலாம்.

2. அன்றியும், ஏனை அறுவகைத் திணைக்கும் இங்கனங் கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறு தற்கோர் காரணமின்மை யானும் அங்ங்னங் கூறாரென்க."

இவற்றுள் முதலது இடம்பற்றியது. செய்யுளியற்குரிய பாட்டுவகை புறத்திணையியலிற் கூறுதல் பொருந்தாதென்பதே. சொற்பொருளைவிட்டொழிக்க விரும்புதற்கிவர் கூறும் காரணம். இந்நூற்பா சுட்டும் பாடாண் பகுதிகள் செந்துறை மார்க்க வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதே நேரிய பொருளென்றுடன்படுகிறார். ஆனாலும், செய்யுளியற்குரிய பாவகை கூறுதலால், அச்சொற்பொருளைக் கொள்ளலாகாதென விலக்குகிறார். இ.திவர் பொருந்தாப் புத்துரைக்குப் போதா தென்பதும், புறத்திணையியலில் சில பாடாண் பகுதிகளுக்குச் சிறந்துரிய பாவகை சுட்டுவது இயலமைவுடைத்தென்பதும், தொல்காப்பியர் மரபு முறை மறவார்க்கெளிதில் தெளிவாகும். அகப்புறத் திணைகளுக்குப் பொதுவான பாவகைகள் செய்யுளி யலில் விளக்குவதால், திணைதோறும் அவ்வதற்குப் பாவகை கூறல் மிகையாகும். அதனால் தொல்காப்பியர் பிற புறத்திணை களுக்குப் பாவகை தனித்தனி கூறிற்றிலர். எனில், செந்துறைப் பாடல் பிற திணைகளுக்குப் பயிலாமல், பாடானிலும் யாண்டும் பயிலாமல், பரவலும்-புகழ்ச்சியும்-முன்னோர் குறிப்புமான' பகுதிகளுக்கு மட்டுமே பொருந்துமாதலின், அப்பொருத்தம் இவ்வியலிற் பாடாண்பகுதியொடு சேர்த்துக் கூறப்பட்டது. இவ்வாறு, ஏற்ற சில பிறவிடத்தும் பொதுவின்றிச் சிறப்பாகத் தனியுரிமையுடைய பாவகைகளைச் செய்யுளியலிற் கூறாமல் ஆங்காங்கே சுட்டுவது இந்நூலாரியல்பாகும்; அகத்திணைகளுக்குக் 'கலியும் பரிபாடலும் உரிய" என்றகத்திணை யியலிறுதியிலும் அதுவே போல உவமவகையான உள்ளுறையுவமத்தை உவமவி யலில் கூறாமல் பெருந்திணை ஒழியப் பிற அகத்திணைகளுக்குச் சிறப்புரிமை கொள்ளுவதால் அகத்திணையியலினும் அவ்வாறே