பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உஉ من} گسسه

உவமத் தொடர்புடைய இறைச்சி முதலிய சில உள்ளுறைகளைப் பொருளியலிலும் விரித்து விளக்குதலறிக. எனவே, தன்னளவில் தவறற்றதாய் எளிதிற் பொருள் தெளியப்படுவதாகும் நேரிய சொற்பொருளை இதிற் குறித்த பாடாண் வகைக்குரிய பாவகையைச் செய்யுளிலியற் கூறாமல் இங்குத் தொடர்பு கருதிப் பாடாண் பகுதியொடு இவ்வியலிற் கூறியதால் மட்டும் மயக்கம் தருமென விலக்குமாறில்லை. எவ்வாறாயினும் பண்டைத் தமிழ்த்திணை விளக்கும் பகுதியில், யாதும் பொருத்தமற்ற ஆரியரின் சாதிபேத ஏகவேறுபாடுகளைப் புகுத்தும் நச்சினார்க் கினியர் முயற்சி வியப்பொடு வெறுப்பை விளைப்பதாகும். எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் எனும் தமிழ் மரபொடு முற்று முரணுவதும் பிறப்பால் என்று மாறாத உயர்வு தாழ்வுடையது மான ஆரிய வருண முறைகளைப் பழைய தமிழர் புறவொழுக்கம் கூறுமிடத்துப் புகுத்த முயன்றி.டர்ப்படுவதிலும், பிற திணை களுக்கும் பாடாணில் பிற பகுதிகளுக்கும் பயிலாத செந்துறை வண்ணப் பாடல் இதிற் குறித்த சில பாடாண் பகுதிகளுக்கு விலக்கில்லை என்பதைப் புறனடையாக இந்நூலாரிங்குத் தெளிக்குமுண்மை தேர்வதே பெரிதும் நயமும் பொருத்தமும் பயனு முடைத்து. ஆய்வுரை

நூற்பா. உ.உ.

இது, பாடாண்பகுதி எட்டினுட் கூறப்படாதெஞ்சிய ஒருசார் பொருட்பகுதியாகிய செந்துறை வண்ணப்பகுதியினைப் பகுத்து விளக்குகின்றது.

(இ=ள்) (பாடாண்திணையுள் எட்டாவதாகிய) செந்துறை மார்க்கமாகிய வண்ணப்பகுதி உலக வழக்குடன் ஒத்து இ4இ' 'சித்து ஒருவரைப் படர்க்கைக்கண் புகழ்தலும் முன்னிலைக் கண் பரவுதலும் கருதின பாராட்டும் பக்கத்தும், முன்னோர் (பின் வரும் மக்களினத்தார் உணர்ந்து உய்திபெறும் நோக்குடன்) அறம்பொருள் இன்பமாகிய நற்பொருள்களை அறிவுறுத்தும் பக்கத்தும் பாடாண்திணையின்கண் வரைவின்றிக் கொள்ளப்படும் ன்று.

பாடாண்திணை பற்றிய பகுதிகளுள் மேலை நூற்பாவிசி குறித்த அமரர்கண் முடியும் அறுவகைகளினும் புரைதிர்காமம் புல்லிய வகையினும் அடங்காமல் மக்களை இயல்புவகையா போற்றிப் பரவும், பாடற்பகுதி செந்துறை வண்ணப்பகுதி எனப்