பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


೬ ಟ್ರಿ! § தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

பாடாண்திணையின் எட்டாம் பகுதியாகக் கொள்ளப்படும் என்பதும் மக்களைப் படர்க்கையிலும் முன்னிலையிலும் வைத்துப் பாராட்டுவதும் முன்னோர் அறம் பொருளின்பமாகிய நற் பொருள்களை மக்கட்குலத்தார்க்கு அறிவுறுத்துவதும் ஆகத் தன்னியல்பில் நிகழும் இருதிறங்களும் செந்துறை வண்ணப்பகுதி என ஒரு பகுதியாய்ப் பாடாண்திணையுள் எட்டாம் பகுதியாக வரைவின்றிக் கொள்ளப்படும் என்பதும் இந்நூற்பாவின் பொருளாகும்.

பாடாண்திணையின் எண் வகையாவன இவையென விளக்கப் போந்த தொல்காப்பியனார், அவற்றை ஒரே நூற்பாவில் ஒரு சேரத் தொகுத்துக் கூறாமல் அமரர்கண்முடியும் அறுவகை, புரைதிர்காமம், புல்லியவகை ஆகிய எழுவகைகளையும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப' என முன்னோர் கூற்றாகப் பிரித்தும் அவ்வெழுவகையுடன் செந்துறை வண்ணப்பகுதி வரைவின்று ஆங்கே என எட்டாவதாக இணைத்தும் கூறியது, முற்குறித்த எழுவகைகளும் புறமும் அகமுமாகிய செய்திகளைப் பற்றிப் பாடப் பெறுவன என்றும் முற்கூறிய செந்துறை வண்ணப்பகுதியொன்றும் செயற்கை வகையானன்றித் தன்னியல்பிற் பாடப்பெறுவது என்றும் பகுத்துணர்ந்துகோடற் பொருட்டெனக் கொள்ள வேண்டியுள்ளது.

23. காமப்பகுதி கடவுளும் வாையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் இளம் : இது, கடவுள்மாட்டு வருவதொரு பாடாண்பக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) காமப்பகுதி கடவுளும் வரையார் - காமப்பகுதி கடவுள்மாட்டும் வரையார், ஏனோர்பாங்கினும் (வரையார்) என் மனார் புலவர் ஏனோர்மாட்டும் வரையார் என்பர் புலவர்.

என்றது, கடவுள்மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கமும், மானிடப்பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்ற வாறு. நச்சர் :

2.A. இது முற்கூறிய கடவுட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ஸ். காமப்பகுதி-முன்னர்ப் புரைதிர்காம (தொல்-புறத் திணை-உசு) மென்றதனுட் புக்குநின்ற புணர்ச்சி வேட்கை;

1. ஏனோர்-தெய்வப்பெண்டிரல்லாத மானிடப்பெண் டிர்,