பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உங். உஅடு

கடவுள் பாங்கினும் வரையார்-கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக் கார்: ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர்-மக்களி டத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் என்றவாறு.

பகுதி ஆகுபெயர். அது கடவுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப்பெண்டிர் நயப்பனவுங், கடவுண் மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம்.

இன்னும் பகுதியென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங் காமஞ்சாலா இளமையோள் வயிற்’ (தொல்-அகத்திணை-டு) காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க.

'அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் றொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே *யடுதோண் முயங்க லவை நா னுவலே யென்போற் பெருவிதுப் புறுக வென்று மொருபாற் படாஅ தாகி யிருபாற் பட்டவிம் மைய லூரே.' (புறம்-அக.)

இது பெருங்கோழி நாய்கன் மகள்" ஒருத்தி ஒத்த அன்பினாற் காமமுறாதவழியுங் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது. இதனானடக்குக."

இன்னும் ஏனோர் பாங்கினும் என்பதனானே கிளவித் தலை வனல்லாத பாட்டுத்தலைவனாகக் கிளவித்தலைவனைக் கூறுவன வுங் கொள்க."

1. இங்குக்கோமம் என்றது, ஒருவனும் ஒருத்தியும் உடம்பொடு கூடி மகிழும் இணை விழைச்சினைக் குறித்ததன்று; உயிருணர்வுடன் ஒன்றும் தூயகாதலாகிய பத்தியுணர்வினைக் குறித்தது, ஆதலின் இது வேறோர் காமம் என்று கொள்க’ என்றார் நச்சினார்க்கினியர்.

(பாடம்) 2 அடுதொறு முயங்கல்? 3 இவள் பெயர் நக்கண்ணையார். புறநானூற்று கசு ஆம் பக்கத்துப் பிரதி

பேதத்தா னுணர்க. 4. பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை யார் என்னும் புலவர் பாட்டு டைத் தலைவனாகிய போர வைக் கோப்பெருநற் கிள்ளியை ஒத்த அன்பினாற் காமமுறாத நிலையிலும் தன் கண் காமமாகிய குணச் சிறப்பின்றி அத்தலைவன் பால் தான் சிறப்பாகக் கொண்டுள்ள அன்பின் பெற்றியைப் புலப்படுத்தும் முறை யில் காமுற்ற தலைவியொருத்தியின் நிலையினை மேற்கோள் பாடியது அக-ஆம் புறப்பாடலா தலின், இது வேறோர் காமம் எனப்பட்டுக் ‘காமப்பகுதி என்பதனுள் அடக்கப்படும் என்பது கருத்து.

5. கிளவித் தலைவன் என்றது, அகத்தினைச் செய்யுட்களில் அகப்பொருள் ஒழுகலாற்றுக்குரியவனாக இடம்பெறுந் தலைவனை. பாட்டுடைத் தலைவன் என்ற து பாடாண்தினை யாகிய புறப்பொருளொழுகலாற்றுக்குரியவனாகச் செய்யுட்களில் இடம்பெறுந் தலைவனை,