பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总.é 所 தோல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

உதாரணம் :

“கார்முற்றி யினருழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலத் தார்முற்றி யதுபோலத் தகையூத்த வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னே சாதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலுரன்.'

(கலி-கூஎ} இது குறிப்பினாற் பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலைவ னாகக் கூறியது.

'மீளிவேற் றானையர் புகுதந்தார்

நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே.” (கலி-ங்க) என்பதும் அது.

இவ்வாறு வருவனவெல்லாம் இதனான் அமைக் க. (உ.அ)

பாரதியார்

கருத்து :- இது, 'புரைதீர் காமம் புல்லிய பாடாண் பகுதி ஒரோவிடத்துக் கடவுளர்க்கும் விலக்கில்லை’ என்று கூறுகிறது.

பொருள் :- காமப் பகுதி-பாடாண் வகையுள் புரைதீர் காமம் புல்லிய பகுதி; கடவுளும்-(மக்களே யன்றிக் கடவுளரும்; ஏனோர் பாங்கினும்-(தம்முள்ளும்) பிறரோடும்; வரையார்கடியமாட்டார்; என்மனார் புலவர்-என்று கூறுவர் புறநூற் புலவர்.

குறிப்பு :- இதில் உம்மையிரண்டும் சிறப்புக் குறிப்பாம். மக்கட்கன்றி, கடவுளர்க்கும் தூய காதற்பகுதி பாடாணாதற் குரித்து: காதலியல் கருதா மேதகு கடவுளரும் இருதலையும் தாமாவும் ஒருதலை மனிதரோடும் காதல் கூறும் நற்காமப் பகுதி யும் பாடாண் வகையாதலுண்டு என்பது குறிப்பு. புரைதீர் காமப் பாடாண் மக்களோடு தேவரும் சேர்வதுண்டு என்பது இந்நூற்பாக் கருத்து. தூய காதல் பாடாணாதற்குரிய தென்பது, மேல் :அமரர்கண் முடியும்’ என்ற சூத்திரத்தில் புரைதிர் காமம் புல்லிய வகையினும் என்றதனால் விளக்கப்பட்டது. காதல் பெரும்பாலும் இருமருங்கும் மக்கட்டலைவரிடை நிகழ்வதியல்பு: ஒரோவழி, ஒரு கடவுள் பிற கடவுளோடும் அன்றிக் கடவுளல்லாப் பிற மனிதரோடும் காதல் கொள்வதும், அது குற்றமற்ற தாயின் ஏற்புழிப்பாடாண் பகுதியாவதும் செய்யுளில் கடிதலில்லை