பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/307

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உங் 岔_呜岛臀

என்றிதில் கூறப்படுகிறது. மேற்பாடாணியல் விளக்கத்தில் புரை யுடைக்காமமே கடியப்பட்டுக் கடவுளர் தூயகாதல் விலக்காமை யாலிது வேண்டாமெனில், திணையெல்லாம் மக்களொழுக்கம் பற்றியவாதலின் பாடாண்திணை கடவுளர் தூயகாதல் பற்றி வருமோ எனும் ஐயமகற்ற இது வேண்டுமென்க. பொதுவாய்ப் பொருளெல்லாம் மக்களின் அகமும் புறமுமாய ஒழுக்கங்களைப் பற்றியனவாகும் புறத்திணை ஏழனுள் இறுதியான பாடாணும், மற்றைய போலவே மக்கட்டலைவர் மேற்றோய் ஒன்று அமரர் கொள் மரபின்' அறுபுறத்திணையினடியாய் வரும். அன்றி அக வகையில் புரைதீர்காமம் புல்லிவரும் இவ்விருவகையுள், 'மறனுடை மரபிற் பாடானாறும் மக்கண்மேற்றாய்ச் செய் யுளில் வழங்கும். புரை தீர்காமம் புல்லிய பாடானும் மானிடத் தலைமக்கள் மாட்டு வருதலே பெருவழக்காம். சிறுவரவிற்றாக, காதல் கண்ணிய பாடாண் கடவுளரிடையும் மக்களொடு கடவுள் காதல் கொள்ளுமிடத்தும் வருதலும் புலனெறி வழக்கில் விலக் கில்லை எனும் பழமரபு கூறப்பட்டது.

கடவுள் கடவுளொடு காதல்கொண்ட புரைதீர்காமப் பாடா ணுக்குச் செய்யுள் வருமாறு :

கண்ணொடு கண்ணினைக் கெளவி யொன்றையொன் றுண்ணவு நிலைபெறா துணர்வு மொன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினான்,' * பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித் தொருவரை யொருவர் தம் உள்ள மீர்த்தலால் வரிசிலை யண்ணலும் வாட்க ணங்கையும் இருவரு மாறிப்புக் கிதய மெய்தினார்.' 'மருங்கிலா நங்கையும் வசையி லையனும் ஒருங்கிய இரண்டுடற் குயிரொன் நாயினார், கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ..!! (கம்பர்-இராமாவதாரம்-மிதிலைக்காட்சி செய்யுள், கூடு,5-எ, .அ) இப்பாட்டுக்களில், திருமாலும் இலக்குமியும் பாற்கடலை விட்டுப் பிரிந்துலகில் வந்து கூடிக் காதலால் கலந்த துய காமப் பாடாண்பகுதி பீடுபெறுதலறிக.

இனி கடவுள் மானிடர் மருங்கு காதலித்த பாடாண் பகுதி, முருகவேள் குறவள்ளியை மணந்த கதையாலறிக.