பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

学万望 - தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

போர்க்கூறாகும் தும்பைத் திணைக்குப் பின், பொருது வென்றோர் வீறு கூறும் வாகைத்திணையும் அதன் துறைகளும் கஅ-முதல் உக-வரையுள்ள சூத்திரங்களில் தெளிக்கப்படுகின்றன. அமர் வெற்றியுடன், அதற்கியைபுடையதாய்ப் பிறதுறைகளில் இகலிவென்றோர் வீறும் கூட்டி, ஒப்பக்கூறல் ஒன்றெணமுடித்தல் தன்னினமுடித்தல் எனு முறையில், பாராட்டுக்குரிய வெற்றி யனைத்தும் இவ்வாகைத்திணையிலடக்கிக் கூறப்படுகின்றன.

மைந்து கருதி மேற்செல்லாது தனக்குரிய இடத்திலே நின்றுள்ள வேந்தன், தன்னை நோக்கி வந்த படையினை எதிர்த்து நிற்றல் தும்பைத் திணையாகுமா என்பது ஆராயத்தக்கது.

போர் என்பது ஒத்தார் இருவர் தொழிலா தலின் அதன் தொடக்கமும் இடை நிகழ்ச்சிகளும் இரு திறத்தார் தொழில் தொகுதியாகப் பிரித்துப் பேசப்படுதல் இயல்பு. அந்நிலையில் ஆகோள் வெட்சி எனவும் நிரை மீட்டல் கரந்தை எனவும் இரு வேறு தினைகளாகவும் பிரித்துக் கூறப்படும் வழக்கம் பிற்காலத்துத் தோன்றி நிலைபெறுவதாயிற்று, பகைவர்மேற் சேறலாகிய ஒழுக்கம் ஒன்றினையே நுதலியது வஞ்சித்தினையாகும். தன்மேல் வந்த பகைவர் படையினைத் தன் னாட்டின் எல்லையின் நின்று தடுத்து நிறுத்துதலும் நாடாள் வேந்தர் மேற் கொள்ளுதற்குரிய போர் நிகழ்ச்சியல்லாவா? இங்கனம் பகைவர் சேனையினைத் தடுத்து நிறுத்தலாகிய இப்போர்ச்செயலை எந்தத் திணையுள் அடக்குவது? என்பதே இங்கு ஆராய்தற்குரிய தொன்றாகும்.

மேற்சேறல் ஒழுக்கம் ஒன்றையே நுதலியது வஞ்சித்திணையாம் என்பது,

  • எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்? அஞ்சுத் தலைச்சென் றடல்குறித் தன்றே. என வரும் நூற்பாவால் இனிது புலனாம்.

‘ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத் தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உள தாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவர்?’ என்பர் நச்சினார்க்கினியர். அவர் கூறுமாறு ஒருவன் பகைவன் மேற்சென்றால்அப் பகை வேந்தனும் அவன் மேற் படையெடுத்துச் செல்வான் என்பது உறுதியன்று. அவ்வேந்தன் தனது நாட் டெல்லை யில் நின்ற வண்ணமே தன்னை நோக்கி வரும் பகைவர் படையினைத் தடுத்துப் பொருது நிறுத்தலும் உண்டு. இச்செயல், தானே பகைவர் மேற் படை கொடு சென்று தாக்குதல் அன்மையின் வளுசித்தினையில் அடங்காது. இருத்திறத் தாரும் தத்தம் வன்மையொன்றையே பொருளாகக்கொண்டு ஒருகளத்துப் பொரு தல் அன்மையின் தும்பையும் ஆகாது. இருதிறப் படையாளரும் தமக்குப் பொது வாகிய ஒரு களங்குறித்துத் தம்முள் ஒத்துநின்று போர் செய்தலே தும்பைத் திணை யாம் என்பது தொன்று தொட்டுவரும் தமிழர் போர் மரபாகும். எனவே தன்மேற் படையெடுத்து வரும் வேந்தனைத் தானும் படையுடன் மேற்சென்று தாக்குதற் கேற்ற வன்மைபெறாத மன்னன் தான் உறையும் நிலத்தினைச் சார்பாகப் பற்றிக் கொண்டு பகைவரது படையினைத் தடுத்து நிறுத்தலாகிய போர் நிகழ்ச்சி, தொல்காப்பியனார் கூறியவாறு பல்லாற்றாலும் நில்லாவுலகத்தைப் புல்லிக் கொண்டு நிகழும் காஞ்சித்திணை யின்பாற்பட்டதாகவே அமைதல் கண்ட முன்னைத் தமிழ்ச் சான்றோர். எதிஆன்றல் காஞ்சி’ எனப் புறத்திணையிலக் கணம் வகுத்துரைத்தனர் எனத் தெரிகிறது. மேற்செறலாகிய வஞ்சியும் எதிரூன்ற லாகிய காஞ்சியும் போர் மேற்கொண்ட இருத்திறத்தாரிடையே ஒன்றற்கொன்று எதிர்நிலையில் நிகழும் இரு வேறு போர் நிகழ்ச்சிகள் என்பதனை

'தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை

தின்றெதி ரூன்றி நீள் பெருங் காஞ்சியும்??.

(சிலப். வஞ்சிக்-காட்சிக்)

என வரும் தொடரில் இளங்கோவடிகள் தெளிவாகக் குறித்துள்ளார். எனவே பிற் காலத்திற் பன்னிருபடலங்கூறும் எதிருன்றல் காஞ்சி' என்னும் இப்புறத்தினை யிலக்கணமரபு தொல்காப்பியனார் கூறிய காஞ்சித் திணை யிலக்கணத்தினுள் அடங்குமென்பதும் இளங்கோவடிகள் காலத்திற்கு முன்னரே உலக வழக்கில் நிலைபெற்று வழங்கிய தொன்மை வாய்ந்ததென்பதும் நன்கு துணியப்படும்.