பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఓ శః ఓ. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

மாறு பிள்ளைத்தமிழ் முதலிய இலக்கிய வகைகள் பிற்காலத்துத் தோன்றி வளர்ந்தன என்பது உண்மையாயினும் இத்தகைய இலக் கியங்கள் பல தோன்றி வளர்தற்கு வேராக அமைந்தது, குழவி மருங்கினுங் கிழவதாகும் எனவரும் இத்தொல்காப்பிய நூற்பா என்பதனை மறுத்தல் ஒண்ணாது.

25. ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான,

இளம் : இதுவும் அது.

(இ-ள்.) ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப-ஊரின் கண் காமப்பகுதி நிகழ்த்தலும் உரித்து என்று சொல்வர் புலவர், வழக்கொடு சிவணிய வகைமையான - அது நிகழுங்காலத்து வழக் கொடு பொருந்திநடக்கும் வகைமையின் கண்.

'ஊரொடு தோற்றம் என்பது பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக வருவது' வழக்கு’ என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை, வகை என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்கக்கூறும் வகைச் செய்யுள். உதாரணம் வந்த வழிக் கண்டு கொள்க,

தச்சர் :

ஊதொடு தோற்ற மு. முரித்தென மொழிப.

இது புரைதீர் காமக்திற்கன்றிப் பக்குநின்ற காமத்திற்குப் புறனடை கூறுகின்றது.

(இ-ள் பக்குநின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடி வந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எறு.

தோற்றமுமென்றது. அக் காமந் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக்கத்தை. அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம்,

இச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பு மென்று பொருள் கூறின், மரபியற்கண்ணே ஊரும் பெயரும்’ (தொல்-மரபியல்-உர்ை என்னும் சூத்திரத்து ஊர்பெறுதலானும்: முன்னர் வண்ணப்பகுதி (தொல்-புறத்திணை உ.எ) என்பதனாற் பிறப்புப் பெறுதலாலும் இது கூறியது கூறலாமென்றுணர்க. (கூ0)

1. பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக வருவது என்றது உலாச் Q೮; ಐ೯. சேரமான்பெருமாள் அருளிச் செய்த திருக்கயிலாய ஞான வுலா இதற்கு இலக்கியமாகத் திகழ்தல் காணலாம்.