பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உடு జి. . 5.

நூற்பா. உடு. உரித்து என்னும் பயனிலைக்கு எழுவாயாக மேற்பகுக்கப் பட்டுநின்ற காமப்பகுதி என்பதனை வருவித்து ஊரிற்பொது மகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண்பகுதிக்கு உரியதாகும்’ எனவும், அது பின்னுள்ளோர் ஏழுபருவமாகப் பகுத்துக் கலிவெண் பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம் எனவும் நச்சினார்க் கினியர் தரும் விளக்கமும் பின்னே தோன்றிய இலக்கியங்களுக்கும் இலக்கணம் அமையும் முறையில் இயற்றப்பெற்றது தொல்காப் பியம் என்னும் உண்மையைப் புலப்படுத்தல் காண்க.

உடு (அ) வழக்கொடு சிவணிய வகைமை யான, இது 'அமரர்கண் முடியும்’ (தொல்-புறத்திணை.உ.சு) என்னுஞ் சூத்திர முதலியவற்றுக்கெல்லாம் புறனடை,

(இ-ள்.) கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு தோற்ற மீறாகக் கிடந்தனவெல்லாஞ் சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்திவந்த பகுதிக்கண்ணே யான பொருள்களாம் எ-று.

எனவே, புலனெறிவழக்கின் வேறுபடச் செய்யற்க என்பது கருத்து.

கடவுள் வாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் பாடியவா றன்றி முப்பத்துமூவருட் சிலரை விதந்துவாங்கிப் பாடப்பெறாது.

இனி அறுமுறைவாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் கூறிய வாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப்படா. நச்சர் :

2-♔ இனிப் புரைதீர் காமம் புல்லிய வகையும் ஒரு வன்றொழுங் "குலதெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது.

இனிச் செந்துறைப்பாடாண்பாட்டு முன்னுள்ளோர் கூறிய வாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது.

இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண் தெய் வத்தோடு இயல்புடையாரைக் கூறினன்றி எண்வகை வசுக்கள் போல்வாரையும் புத்தர் ‘சமணர் முதலியோரையுங் கூறப்படாது. இனி மக்களுள் ஒருவனைத் தெய்வப்பெண்பால் காதலித் தமை கூறுங்காலும் மக்கட்பெண்பாற்குக் காதல் கூறுங்காலும் முன்னோர் கூறியவாறன்றிக் கூறப்படாது.

(பாயம்) 1 குலதெய்வ: 2 5<গুtpকরা ?