பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9、 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

இனிக் குழவிப்பருவத்துக் காமங் கூறுங்காலும் முன்னர்க் காப்பும் பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறியவாறன்றிக் கூறப்படாது.

இனி ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமக ளிர்க்குக் கூறப்படாது.

இன்னுஞ் சிவணிய வகைமை என்றதனானே முற்கூறியவற் றோடே நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரும் பிறவும் வருவன வெல்லாங் கொள்க."

"மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை பால் பயந் தழிஇய பயங்கெழு நெடுந்தோட்டு நீசறன் மருங்குவழிப் படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சசச் சீருடைத் தேனத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை பயிரைப் பொருந. (பதிற்றுப்-உக) இது மலை யடுத்தது.

'ஆவஞ் சேர்ந்த புறத்தே தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும். (புறம்-கச) இது படையடுத்தது.

'பூங்க னெடுமுடிப் பூவைப்பூ மேனியாள் பாம்புண் பறவைக் கொடிபோல--வோங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி :

(புற. வெ-பாடாண் கூக) இது கொடியடுத்தது.

"வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்

மாலை வெண்குடை யொக்குமா லெனவே.'

  • (புறம்-சு0) இது குடையடுத்தது.

'முரசு முழங்குதானை மூவருங் கூடி யாசவை யிருந்த தோற்றம் போல.' (பொருந)

இது முரசடுத்தது.

1. இளம்பூரணர் கொண்டபடி இவ்வடியினையும் மேலைச் சூத்திரத்துடன் கூட்டி ஒரு சூத்திரமாகக் கொள்ளுதலே நூற்பாவமைதிக்கு ஒத்ததாகும்.

- :கொடிப்போல 2 زغالسا نا )