பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/315

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உடு உகடு

'சாலியரி சூட்டான் மடையடைக்கு நீர் நாடன் மாலு மழைத்தடக்கை மாவளவன்-காலியன்மா மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப் பொன்னு ை கற் போன்ற குளம்பு.’’

இது புரவியடுத்தது. 'அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்ன செயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற்-பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் தோன்றுமே பெங்கோமான் காய்சினவேற் கிள்ளி களிறு.'

(முத்தொள்ளாயிரம். யானைமறம்-எக)

இது களிறடுத்தது.

"நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவு தோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ.” (புறம்-ச)

இது தேரடுத்தது.

மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப.”

(புறம் கo) இது தாரடுத்தது. இவற்றுட் சிலவற்றை வரைந்துகொண்டு இன்னப்பூவென்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க." (க.க)

பாரதியார்

கருத்து :- இது, பாடாண் திணையில் தலைமக்கள் ஊரும். உயர்குடிப்பிறப்பும் பாராட்டற்குரியன என விளக்குகிறது.

பொருள் :- ஊரொடு தோற்றமும்-தலைமக்களின் ஊர்ச் சிறப்பும் உயர்குடிப்பிறப்பும்; உரித்தெனமொழிப-பாடாண் திணையில் பாராட்டுக்குரிய எனக் கூறுவர் புறநூற்புலவர்; வழக்கொடு சிவணிய வகைமையான-அப்பாராட்டு புலனெறி வழக்கொடு பொருந்தும் பகுதிகளில்.

1 கோதை"யென ஏடுகளிலுள்ளது 2 .பொ விவாடு தோன்றி?

3. சான்றோர் செய்த புலனெறி வழக்கொடு பொருந்தி வரும் இலக்கியக் கொள்கை சிலவற்றை இங்கு நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளமை அறியத் தகுவ தாகும். புறத் திணைக்குரிய பாட்டுடைத் தலைவர் பெயரை மெய்ப்பெயர்: எனவே . அகத்தினைக்குரிய கிளவித் தலைவர் பெயர் புனைந்துரை வகையாற் கூறப்படுவதென்பதும் உண்மைப் பெயரன் றென்பதும் புலனாம்,