பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உடு 2.88 לל

இவ்வகையாற் பாடப்பெற்றனவாக முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவ தாகும்.

இனி, ஊரொடு தோற்றம்’ என்பது, பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக வருவது எனவும், வழக்கு" என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை வகை என்பது அவரவர் பருவத் திற்கு ஏற்கக் கூறும் வகைச் செய்யுள்' எனவும் விளக்கந்தருவர் இளம்பூரணர். சேரமான்பெருமாள் நாயனார் பாடியருளிய திருக்கயிலாய ஞானவுலாவும் பிற்காலத்தில் ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலாப்போல்வனவும் ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப, வழக்கொடு சிவணிய வகைமையான எனவரும் இத்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றித் தோன்றிய இலக்கி யங்களாகும்.

இனி, இதன்கண் வழக்கொடு சிவணிய வகைமையான' என்ற அடியினைத் தனிச்சூத்திரமாகக் கொண்டு 'அமரர்கண்முடியும்' என்னுஞ் சூத்திரமுதலியவற்றுக்கெல்லாம் புறனடையாகக் கொண்டு உரைவரைந்தார் நச்சினார்க்கினியர் ஆசிரியர் தொல்காப்பியனார் கற்பார்க்குப் பொருள் தெள்ளிதின் விளங்க வைத்துக்கொண்ட நூற்பா அமைப்பின்படி நோக்குங்கால் இவ்வோரடியினை ஒருசூத்திரமாகக் கொள்ளுதல் பொருந்தாமை புலனாம். எனவே இவ்விரண்டடிகளையும் ஒரு சூத்திரமாகக் கொண்டு உரைவகுத்த இளம்பூரணர் கொள்கையே இங்கு ஏற்புடையதாகும்.

'ஊரொடு தோற்றமும் உரித்தெனமொழிப' என்பதற்கு, “ஊரிற் பொதுமகளிரோடு கூடி வந்த விளக்கமும் பாடாண் திணைக்கு உரித்து என்று கூறுவர்' எனப் பொருள் வரைந்து, 'வழக்கொடு சிவணிய வகைமையான' என்பதன் உரையில் 'ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப் படாது' என விளக்கந்தருவர் நச்சினார்க்கினியர். இவ்விளக்கம் உரையாசிரியர் தம்காலத்து வழங்கிய உலகச் செய்யுளாகிய இலக் கியத்தினை முதனூலாகிய தொல்காப்பிய இலக்கணத்துடன் தொடர்புபடுத்து ஒப்பியல் நோக்குடன் கூறப்பட்டதெனவே கொள்ளற்பாலதாகும்,

இனி, பாடாண் திணையில் தலைமக்கள் ஊரும் உயர்குடிப் பிறப்பும் பாராட்டற்குரியன என விளக்குவது இந்நூற்பா எனக் கருத்துரை வரைவர் நாவுலர் பாரதியார். ‘காமப்பகுதி கடவுளும்