பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

胺、鲁G தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

வரையார்’ என்பது முதல் மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே என்பது முடியவுள்ள நான்கு சூத்திரங்களும் பாடாண் பகுதி எட்டினுள் ஒன்றாகிய காமப்பகுதி'யினைக் குறித்த சிறப்பு விதிகளாதலின் இந்நூற்பாவினைப் பாடாண்திணைப்பகுதிகள் அனைத்திற்கும் உரிய பொதுவிதியாகக் கொண்டு உரைவரைதல் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்ற வில்லை.

26 மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே

இளம் : இதுவும், பாடாண்பாட்டிற்கு உரியதொரு மரபு உணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்) மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே’-மேற் சொல்லப்பட்டனவும் இனிக் கூறுகின்றனவும் ஒருவற்குக் காரண மாகி மெய்ப்பெயராகி வரும் பொதுப்பெயரான் அன்றி இயற் பெயரின் பக்கத்து வைத்தனர் நெறிப்பட. (്ല.ങ്ങ് நச்சர் :

2-ன்

இது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளும் பாடாண்டிணைக்குரிய மெய்ப்பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென்கின்றது.

(இ-ள்.) மெய்ப்பெயர்மருங்கின்-புறத்திணைக்குரிய மெய்ப் பெயர்களின் மருங்கே ; வழி வைத்தனர்-புறத்திணை தோன்று தற்கு வழியாகிய அகத்திணையை வைத்தார் முதனூலாசிரியர் என்றவாறு

என்றது எனக்கும் அதுவே கருத்தென்பதாம். வழியென்பது ஆகுபெயர். மெய்ப்பெயராவன புறத்திணைக்குரிய பாட்டுடைத் தலைவர் பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம்.

இதன் கருத்துச் சுட்டியொருவர் பெயர்கொளப் பெறாஅர்" (தொல்-அகத்திணை டுச) என அகத்திணையியலுட் கூறினமையிற் கிளவித்தலைவன் பெயரை மெய்ப்பெயராகக் கொள்ளாது ஏனைப் புறத்திணையாற்கொண்ட மெய்ப்பெயரிடம் பற்றி அகத்திணைப் பொருணிகழவும் பெறுமென்பதாம்."

1. மெய்ப்பெயர்-ஒருவர்க்கு மெய்யை (உடம்பை)ச் சுட்டி வழங்கு தற்கு உரியதாக இடம்பெற்று வழ்ங்கும் இயற்பெயர்.

2. வழி-நெறி. பாடாண்பாட்டில் இயற்பெயர் இடம்பெறுதல் இன்றியமை யாது என்பது கருத்து.

3. இந்நூற்பாவில் வழி’ என்றசொல், புறத்திணை தோன்று கற்கு வழியா கிய அகத்திணை’ என்ற பொருளில் ஆளப்பெற்றது என்பார், வழியென்பது ஆகு பெயர்’ என்றார்.

4. மெய்ப்பெயராற் குறிக்கப்படும் பாட்டுடைத் தலைவரது ஆட்சிக்குரிய நிலப்பகுதியினை நிலைக்களனாகக் கொண்டு கிளவித் தலைவரது அகத்திணை யொழுகலாறு நிகழ்ந்ததாகச் செய்யுள் செய்தல் மரபெனபது இதனாற் புலனாம்.