பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/322

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


函_Gg_ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

இது முதலிய மூன்றும் புகாரிற் றலைவியெனக் கூறியவாறு காண்க.

இன்னுஞ் சான்றோர் செய்யுட்கள் இங்ஙனம் வருவனவெல் லாம் இதனால் அமைக்க. இக் கருத்தினாற் செய்யுள் செய்த சான்றோர் தமக்கும் பாடாண்டலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி அகத்தினைச் செய்யுள் செய்தாரேனும் தம்மிசை பரந்துலகேத்த வேதினாட்டுறைபவ ரென்று இவை பாடாண் டிணையெனப் பெயர்பெறா என்றற்கு இது கூறினார்." )Eسع س(

பாரதியார்

கருத்து :- இது புரைதீர்காமப் பாடாண்பகுதியிற்றலை மக்கள் பெயருங் கூறப்பெறு மரபுண்மை சுட்டுகிறது.

பொருள் :- மெய்ப்பெயர்-தலைமக்களின் உ ண் ைம ப் பெயரை; மருங்கில் வழியே வைத்தனர்-பாடாண் பகுதியில் நெறியாக அமைத்துக் கூறினர் புறநூற்புலவர்.

குறிப்பு :- மருங்கு-பக்கம்; இங்கது பாடாணின் பக்கம் குறிக்கும். அகத்திணைக்கு விலக்கப்பட்ட இயற்பெயர் காதற் பாடாண் புறத்திணையில் வருதல் புலனெறியாதலின், வழியே வைத்தனர்' என விளக்கப்பட்டது. ஈற்றேகாரம் அசை. 'புறநூற் புலவர்' எனுமெழுவாய் அவாய் நிலையாற் கொள்ளப் பட்டது. ஆய்வுரை

நூற்பா. உ. சு. இது, புரைதீர்காமம் பற்றிய பாடாண்பாட்டிற்கு உரியதோர் மரபு உணர்த்துகின்றது.

(இ-ள்) மேல் அகத்திணைக்கண் அளவுதல் இல என விலக்கிய இயற்பெயராகிய மெய்ப்பெயரை அதன்மருங்கு (பக்கம்) எனப்படும் கைக்கிளை பெருந்திணை பற்றிய பாடல்களில் வழி முறையாக வைத்துப் பாடினர் பண்டைப் புலவர். எ-று;

எனவே, பாடாண் திணைப்பகுதி எட்டினுள் ஒன்றாகிய காமப்பகுதி பற்றிய பாடல்களில் தலைமக்கட்குரிய இயற்பெயர் இடம் பெறுதல் தொன்றுதொட்டு வரும் இலக்கிய மரபாகும்

1. சங்கச் சான்றோர், அரசர்கள் வள்ளல்கள் முதலியோர்கள் பால் தாம் கொண்டுள்ள அன் புகாண்மாக அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவர்தம் மெய்ப்பெயர்களை வைத்து அகத்திணைச் செய்யுட்கள் பாடி னாராயினும் அப்பாடல்கள் பாடாண்டிணையெனப் புறத்திணைப்பெயர் பெறாது அகத்தினைச் செய்யுட்களாகவே கொள்ளப்படும் என்பதாம்.