பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

版.○á தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

(இ - ள்) கொடிநிலை-கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்; கந்தழி-ஒரு பற்றுக்கோ டின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளிதண்கதிர்மண்டிலம்;என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்என்று சொல்லப்பட்ட குற்றந்தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப் பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே-முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும் என்றவாறு.

"பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை

மையறு மண்டிலம் வேட்டனள் வையம்

புசஆக்கு முள்ளத்தே னென்னை யி ஆக்கு

மின்னா விடும்பை செய் தாள்’’ (கவி-கசக) என்ற வழிக் கீழ்த்திசைக் கண்ணே தோன்றும் மண்டிலமென்றாற் போலக் கொடிநிலை யென்பது உம் அப் பொருடந்ததோர் ஆகுபெயர்.

இனி எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந் நீடனிலைமை பற்றிக் கொடிநிலை யென்பாருமுளர்.

'குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே'

(குறுந் கா.உ)

என்றாற்போல வள்ளியென்பதுவுங் கொடியை; என்னை? பன் மீன் தொடுத்த உடுத்தொடையைக் கொடியெனப்படுதலின், அத் தொடையினை இடைவிடா துடைத்தாதலின் அதனை அப் பெயராற் கூறினார்; முத்துக்கொடியெனவும் மேகவள்ளியென வுங் கூறுவதுபோல, கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையே வைத்தார்.

இனி அமரரென்னும் ஆண்பாற் சொல்லுள் அடங்காத பெண்பாற் றெய்வமும் வள்ளியென்னுங் கடவுள் வாழ்த்தினுட் படுவனவாயின பாடா ணெனப்படா வாயினுமென்பது; என்னை? ஞாயிறு நெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமை யானுந், திங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமை யானுமென்பது. அல்லது உம், வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளியென்பது உமாம் என்பது.

1. இனி அமரரென்னும் ஆண் பாற் சொல்லுள், அடங்காத வள்ளியெ ன் னும் பெண் பால் தெய்வமும்’ என இவ் அரைத் தொடரைத் திருத் திப் படித்தல் வேண்டும்.