பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


_{} ప్తి, தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

துரைக்கப்பட்டது. போரைத் தொடங்குந் திணை வெட்சி, அதன் பொதுவகை ஆகோள்; சிறப்பு வகைகளுள் பாடாணாய்க் கடவுள் வாழ்த்துக் கண்ணுவன இதிற் குறித்த மூன்றுமேயாதலின் முற்றும்மை கூட்டப்பட்டது. இதிற் குறித்த மூன்றும் தம்மளவில் வெட்சி வகைகள். அவற்றை முதலாகக் கொண்டு வரும் பாடாண் பகுதி மூன்றே கடவுள் வாழ்த்தொடுவருமெணற்கு முதலன மூன்றும்’ என்று கூறப்பட்டது. 'அகரமுதல எழுத்தெல்லாம்” என்றதுபோல, கடவுள் கண்ணிய பாடாண்வகை இதிற்குறித்த 'மூன்று முதலன’’ எனக் கொள்க. "முதலன’ ஈண்டுக் குறிப்பு வினை; “முதலாகவுடையன என விரியும்.

இனி, கொடிநிலை முதலிய மூன்றையு முதலன' என்றது. அடிவ 'அமர்கொள் மரபுத்திணை எழில் முதலாய வெட்சியில் போர்க்தொடக்க முதலில் நடைபெறுவன வாதலின், என்பாரு முளர்,

வெட்சி வகையாய் இதிற்குறித்த கொடிநிலை முதலிய மூன்றும், அடுத்த சூத்திரம் கூறும் வஞ்சிவகைக் கொற்றவள்ளை, ஒன்றும், இங்கு முறையே அவ்வத் திணையடியாய்ப் பிறக்கும் பாடாண் வகையையே குறிக்கும் என்பதை இளம் பூரணர் நச்சினார்க்கினியரிருவரும் கூறுகின்றனர். ஆனால், இதன் முதலடி யில் "கொடிநிலை கந்தழி வள்ளி' என்றிருவரும் பாடல் கொண்டு கந்தழிக்கு வெவ்வேறு பொருள் கூறுவர். கந்தழி' என் றொன்றை எத்திணைக்கும் துறையாகத் தொல்காப்பியர் கூறிலர்: யாண்டுமதை அவர் விளக்கவுமில்லை பழைய சான்றோர் செய்யுட் களிலும் இப்பெயருடைய புறத்துறை எதுவும் பயிலாமையானும், இனைத்தென விளக்காதெனையும் வாளா பெயரளவில் சுட்டி மயங்கவைப்பது தொல்காப்பிய ரியல்பன்றாதலானும், இதில் 'கந்தழி' என்ற பாடம் பொருந்தாமை வெளிப்படை. அன்றியும், இதில் கடவுள் கண்ணியபாடானாய் முடியுமெனக் குறித்த மூன்றும் மறனுடைய மரபிற் போர் துவக்கும் புறவொழுக்காம் ஒரே தன்மையவென விளங்க முதலமூைன்றும்’ என்றொரு நிரலில் சுட்டப்படுதலானும். அவற்றுள் கொடிநிலையும் வள்ளியும் போர்த் துவக்கத்தில் நிகழும் வெட்சி வகைகளாய் முன் விளக்கப் பட்டனவாதலானும், அவற்றுடன் பொருந்த ஒருங்கு கூட்டப் படும் மற்றொன்று மவைபோலவே இங்கு விளக்காமல்) முன் விளக்கப்பட்ட போர்த்துவக்க வெட்சிவகையாதல் வேண்டுமாத லாலும், இவ்வியலில் முன் வெட்சித்துறைகளுள் முதலில் முருகக் கடவுள் வாழ்த்துடன் போர் துவக்குவதாய் விளக்கப்பட்டது