பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உள கி.0 கன்

காந்தளா தலானும். அதை யிங்குச் சுட்டாது விட்டுக் கடவுள் வாழ்த்தொடு வரும் வெட்சிப் பாடாண் வகை முதலன மூன்றும் என முற்றும்மை கொடுத்து முடித்தது குன்றக்கூற லெனும் குற்றமாமாதலானும், கடவுள் வாழ்த்தொடு பாடா ணாய் முடியும் வெட்சியல்லாப் பிறவஞ்சிவகைய இதன்பின் வேறு சூத்திரத்திற் கூறுதலாலிங்கு சுட்டிய மூன்றும் வெட்சிவகை யாதலே முறையாதலானும், அத்தகைய வெட்சிவகை காந்தள் என்றன்றிக் கந்தழியென முன் சுட்டப்பெறாமையானும், இதிற் கந்தழியிடத்தில் காந்தளே நிற்றற்கு அமைவுடைய பாட மாதல் வேண்டும்; நாளடைவில் பொருட் பொருத்தங் கருதாமல் ஏடு பெயர்த்தெழுதும் பரிசால் அது சிதைந்து ‘கந்தழி' யாகி, பிறகதன் பொருத்த மாராயா துரைகாரர் தத்தமக்குத் தோற்றிய வாறு பொருளுரைக்க அப்பாடமே நிலைத்தது போலும். இயற் பொருத்தம் தேராமல் கண்டாங்குக் கந்தழிப்பாடம் கொண்ட வுரைகாரரும். அவருரையால் மயங்கிய பிறரும், அதன் பொருளும் பொருத்தமும் தெளிந்து துணியமுடியாமல் தம்முள் மாறுபட்டு மறுகுவதொன்றே அப்பாடத்தியைபின்மையைத் தெளிப்பதாகும். இதை நச்சினார்க்கினியர் பாடாண் பரிசழித்து அருவான கடவு ளாக்குவர்; அது பாடாண் புறத்துறையாகாமையை ஆன்றோர் Hசிைய செய்யுட்களில் ஆட்சியின்மை வலியுறுத்தும் இளம்பூரணர் கந்தழியியல்பை விளக்காமல் 'அன்றெறிந்தானு, மெலும் வெண் பாமாலைப் பாட்டைக் காட்டியமைவர். அப்பாட்டு உழிஞை வகை யாதலொன்றே, வெட்சிவகை குறிக்குமிங்கது பொருந்தாமை துணியப் போதிய சான்றாம்.

இனி, (1) கொடிநிலை வெட்சி பாடாணாய்க்கடவுள் வாழ்த்தொடு வருதற்குச் செய்யுள் வருமாறு:

1. புள்ளும் வழிப்படாப் புல்லார் நிரைகருதிப் போகுங்

36ు శ్రీ கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையுங்

கொடுமரமுன் செல்லும் போலும்'

(சிலப்பதிகாரம்-வேட்டுவவரி.)

இதில், நிரைகருதிப் போதல் வெட்சியாதலும், அதற்கு கொடியெடுத்து முன் செல்லுதல் “கொடிநிலை யாதலும்

காண்க.

- 1. இந்நூற்பாவிற் பழமையாக இடம் பெற்றுள்ள கந்தழி என்ற பாடத்தைக் காந்தள் எனத் திருத்தி உரைவுரைந்துள்ளார் நாவலர் பாரதியார் .