பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் تلقی :

பாமாலை'யாதலால், பின்னது முன்னதன் முறையையே முழுதுந் தழுவி நடப்பதாகும். இவ்வுண்மை தேறாமல், இவற்றின் புது முறையே பழைய தொல்காப்பியமுங் கூறுமெனக் கருதிப் பிற்காலப் புலவர் சிலர் அப்பண்டைநூற் சூத்திரங்களுக்கும் பின்னுாற் கருத்துக்களையேற்றிப் பலவிடங்களில் பிறழ உரைகறி யிடர்ப் படுதலறிந்து பிழைவிலக்கி மெய்ப்பொருள் காண முயலுவது நம்மனோர் கடமையாகும்.

எழுதிணையென்னும் முந்துநூன் முறைபிறழப் பிந்தியோர் கொண்ட புறத்திணை பன்னிரண்டும் வருமாறு:- 1. போர்த் துவக்கமாம் ஆகோள் வெற்றியும், (2) அதற்கு மறுதலையாய், வெட்சியோர் கவராமல் நிரை மீட்க முயலும் காவலர் எதிர்ப்பாம் கரந்தையும், (3) பகைவரின் நாடு கொள்ள வெழும் படைச் செலவு வஞ்சியும், (4) அதற்கு மறுதலையாய், மலையவந்த பகைவரை நின்றார் எதிருன்றித்தகைவது காஞ்சியும், (5) மதிலை வளைத்துக் கொள்ளுதல் உழிஞையும், (6) அதற்கு மறுதலையாம், அகத்தோர் தம் மதில்காத்தல் நொச்சியும், (7) சென்ற பகையோரும் நின்று தகைவாரும் தம்முட் பொருதல் தும்பையும், (8) போரில் வெல்லுதல் வாகையும், (9) எவ்வாற்றானும் புகழப் படுதல் பாடானும், (10 இத்திணைகட்கெல்லாம் பொது வாயுள்ளவை பொதுவியலும், (11) இருமருங்கொவ்வா. ஒருதலைக் காதல், கைக்கிளையும், (12) பொருந்தாக் காமம் பெருந்திணையும் எனப் பன்னிரு புறத்திணை பகரப்படுவன

இன்னும் இப்பின்னுாலோர், இவற்றுள் முதலன ஏழே புறத் திணையெனவும், ஈற்றுறுமிரண்டும் அகப்புறமெனவும், இடைப்படு மூன்றும் புறப்புறமெனவும், தொகை பன்னிரண்டும் வகைபெறு மென்பர். காலத்தொடுபட்டு மரபு பிறழாமல் ஏற்புழி வழக்கொடு பொருந்தப்புகும் புதியதும், கடிதலின்றிப் போற்றற்குரியவாதல் கூடும். எனில், மிகையாகும் இப்புதிய புறத்திணைவகை பழைய தமிழ் முறையோடு முரணுவதுமட்டுமன்று; இது செவ்விய வகுப்பு முறையெதுவுமின்றி, தடை பலவற்றிற் கிடமும் தருகின்றது. முதற்கண், மேற்காட்டியாங்கு கரந்தை வெட்சியிலும் நொச்சி உழிஞையிலும் இப்பின்னூற் காஞ்சி தும்பையிலும் முறையே அதனதன் பகுதியாயடங்கி யமைதலானும், எதிர்ப்பற்ற வெட்சி வஞ்சி உழிஞை தும்பைகள் கருதொணாமை கண்கூடாதலானும், இவ்வாறு கூறுவன வேறாம் திணைகளெனப் பிரித்து வகுப்பதற் கிடமும், அதிற்சிறப்பும் காணற்கில்லை.