பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உள 岳上さ改S

ஆய்வுரை

நூற்பா. உஎ . இது, பாடாண்திணைப்பகுதிகளுள் போர்வீரர்கண்ணே பொருந்தும் துறைகள் சிலவற்றுக்கு உரியதோர் மரபு உணர்த்து கின்றது.

(இ-ள்) வேந்தர் வெற்றிகுறித்து எடுத்த கொடியின் சிறப் புணர்த்தும் கொடி நிலையும், பகைவேந்தர்க்குப் பற்றுக்கோடாக வுள்ள அரணையழித்தலாகிய கந்தழியும், வேந்தற்கு வெற்றி வேண்டியாடும் வள்ளிக்கூத்தும் எனப் போர்த்தொடக்கத்தின் முன்னர் வைத்து எண்ணத்தக்க குற்றமற்ற சிறப்புடைய இப்புறத் துறைகள் மூன்றும் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருங் காலத்து முற்குறித்த செந்துறை வண்ணப்பகுதியாகிய கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் எ-று.

கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் எனத்தொல்காப்பியனார் கூறியது கொண்டு, அரி, அயன், அரன் என்னும் முத்தேவர் கொடிகளுள் ஒன்றோடு உவமித்து அரசனது கொடியைப் புகழ்வது கொடி நிலையென்றும், திருமால் சோ என்னும் அரணையழித்த வெற்றி யைச் சிறப்பிப்பது கந்தழியென்றும், மகளிர் முருகனை வழிபட்டு வெறியாடுவது வள்ளியென்றும், துறைவிளக்கம் கூறினார் ஐயனாரிதனார். இம்மூன்றனுள் முதலிரண்டு துறைகளுக்கும் அவரிாற்றிய வெண்பாமாலைப் பாடல்களை உதாரணமாகக் காட்டின இளம்பூரணர், வள்ளியிற் சார்ந்து வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க’ என வரைந்து, இம்மூன்றுதுறைகளுக்கும் ஐயனாரி தனார் கூறிய விளக்கங்களை அவ்வாறே ஏற்றுக்கொண்டுள்ளார்.

இனி கொடிநிலையென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலை பெற்றுத்தோன்றும் வெஞ்சுடர் மண்டிலமாகிய ஞாயிறு எனவும், கந்தழி என்பது ஒருபற்றுக்கோடுமின்றி அருவாய்த் தானே நிற்குந் தத்துவங்கடந்த பொருள் எனவும், வள்ளி என்பது தேவர்க்கு அமிர்தம் வழங்குந் தண்கதிர் மண்டிலமாகிய திங்கள் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். இம்மூன்றனுள் கந்தழி என்பதற்கு அவர்கூறும் இலக்கணம் கடவுளுக்கேயுரிய சிறப்புடைய தாதலால் அதுவே கடவுள் வாழ்த்தாவதன்றிக் கடவுள் வாழ்த் தினைச் சார்ந்துவரும் வேறொரு புறத்துறையென அதனைக் கொள்ளுதற்கில்லை. ஞாயிறுந் திங்களுமே கூறுவது தொல்காப்பி யனார் கருத்தாயின் ஞாயிறு திங்கள் சொல்லனவரூஉம் (தொல்: