பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/332

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


放ー&a- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

கிளவி) என்றாற்போன்று எல்லார்க்கும் புலனாகும் இயற்சொல் லால் ஞாயிற்றையும் திங்களையும் வழங்குவதன்றிக் கொடிநிலை, வள்ளி எனத் தாம் கருதியபொருள் பலர்க்கும் புலனாகாத நிலை யில் வைத்துக் கூறமாட்டார். எனவே கொடிநிலை முதலிய மூன்றற்கும் நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் தொல்காப்பி யனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை.

மேற்குறித்த நச்சினார்க்கினியர் விளக்கத்தை அடியொற்றிக் கொடிநிலையை ஞாயிறு எனவும் வள்ளியைத் திங்கள் எனவும் கந்தழி என்பதற்குத் தான் பற்றி நின்றதனை யழிக்கும் தீயென வும் பொருள் கூறி இம்மூன்றும் முத்தீவழிபாட்டினைக் குறிக்கு மென்றார் மறைமலையடிகளார்.

கொடிநிலை என்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெறுதலை யுடைய மேகத்தையும், கந்தழி என்பது பற்றற்றாராகிய நீத்தா ரையும், வள்ளியென்பது வண்மைபற்றி நிகழும் அறத்தையும் குறிப்பன எனக்கொண்டு, இம்மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் என்றும், இம்முறையிலேயே திருக்குறளில் கடவுள் வாழ்த்தையடுத்து வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரங்கள் வைக்கப்பெற்றன என்றும் கூறுவர் அறிஞர் மு, இராகவையங்கார். சிலப்பதிகார மங்கல வாழ்த்துப்பாடலில், திங்களைப்போற்றுதும்', ஞாயிறு போற்றறு தும்’, ‘மாமழை போற்றுதும் எனவரும் வாழ்த்துப் பாடல்களைக் கூர்ந்து நோக்குங்கால் மேற்குறித்த ஞாயிறு திங்கள் என்னும் இரு சுடர் வணக்கத்துடன் இயைத்துரைக்கப்படும். வள்ளி' என்ப தற்குக் கைம்மாறு கருதாது மன்னுயிர்கள் நலம்பெறப் பொழியும் மாமழையெனப் பொருள் கொள்ளுதலே பொருத்தமுடைய தாகும் என்பது மற்றொரு விளக்கமாகும்.

இனி முதலனமூன்றும் என்றமையால், கொடிநிலை முதலிய துறைகள் மூன்றும் இவ்வியலின் முதற்கண் சொல்லப்பட்டன வாதல் வேண்டும் என்றும் கந்தழி என்னுஞ்சொல் தொல்காப்பி யத்தில் இவ்வோரிடத்திலன்றிப் பிறவிடங்களில் எங்கும் இடம் பெறாமையானும் கொடிநிலை வள்ளி என்பவற்றையடுத்து முதலிற் கூறப்படாமையானும், இச்சொல் பழைய தமிழ்நூல்களில் யாண்டும் காணப்படாமையானும் வெறிய சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியட்டயர்ந்த காந்தள் என ஆசிரியர் முன்னர் வெட்சித்திணையிற் குறித்த காந்தள் என்பதே ஏடெழுதுவோ ராற் ‘கந்தழி எனத் தவறாகத் திரிந்தெழுதப்பட்டதென்றும்