பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/333

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உள 历一凸芯上

முன்னர் மறங்கடைக்கூட்டியகுடிநிலை எனவரும் புறத்திணை யியற் சூத்திரத்தில் இளம்பூரணர் கொண்ட குடிநிலை’ என்ற பாடம் கொடிநிலை என்றே வழங்கிவந்து பின் ஏடெழுதுவோ ரால் குடிநிலை எனவும் துடிநிலை எனவும் திரித்தெழுதப்பட்டி ருத்தல் வேண்டும் என்றும், எனவே,

கொடி நிலை காந்தள் வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலனமூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பதே இந்நூற்பாவின் திருந்திய பாடம் என்றும் கொண்டு அதற்கேற்பப் பொருள் வரைந்து உதாரணங்காட்டுவர் நாவலர் பாரதியார்.

"முதலனமூன்றும் என்ற தொடர், இவ்வியலின் முதற்கண் கூறப்பட்ட மூன்றும் என்ற பொருளிலன்றிப் பாடாண்திணைக் குரிய புறத்திணைத் துறைகளில் முதலிடம் பெறத்தக்கனவாகிய மூன்றும் என்ற கருத்திலேயே இங்கு ஆளப்பெற்றது என்பது. இளம்பூரணர் நச்சினார்க்கினியர் உரைகளால் நன்கு விளங்கும். "முற்படக்கிளந்த எழுதினையென்ப' என்னும் அகத்திணையியல் நூற்பாவும் இங்கு நோக்கற்பாலதாகும். இத்தொடர்க்கு 'இவ்வியலின் முதற்கண் சொல்லப்பட்ட மூன்றும்' எனப் பொருள் கொள்ளின் கொடிநிலை என்ற துறை முற்பகுதிகளில் இடம்பெறவில்லை. அதுபோலவே கந்தழியும் இடம் பெற வில்லை. வள்ளி என்னுந் துறையினைப் போன்று அவையிரண் டும் முன்னர்க்கூறப்பட்டிருத்தல்வேண்டும் என்ற துணிவுடன் முன் கூறப்பட்ட குடிநிலையைக் கொடிநிலையெனவும் கந்தழியைக் காந்தள் எனவும் திருத்துதல் முன்னோர் கூறிவரும் உரைமரபுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. கந்து என்னும் சொல் பற்றுக்கோடு என்னும் பொருளில் வழங்குதல் "கடிமரந்தடிதல் ஒம்பு நின், நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாவே (புறம்-இன்) எனவும் காதன்மை கந்தா அறிவறியார்த்தேறுதல்’’ \திருக் குறள்-இ0 எ) எனவும் வருந்தொடர்களால் இனிது விளங்கும். தொல்காப்பியனார் கூறிய முறையே கொடிநிலை கந்தழி வள்ளி என்ற மூன்று துறைகளுக்கும் விளக்கம் கூறவந்த ஐயனாரி தனார், 'கந்தழி என்பதனையே துறைப்பெயராகக் கொண்டு விளக்கந் தருதலால், கந்தழி என்னும் சொல் பழந்தமிழ் நூல் களில் இடம்பெற்று வழங்கும் தொன்மையுடையதென்பதும், அச் சொல் கந்து-அழி, கந்தழி என இருசொற்புணர்ச்சியாய் ஒட்டி ஒரு