பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/334

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


శ్రీ శ్రీ: தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

சொல்லாய்நின்று, பற்றுக்கோட்டினையழித்தல் என்ற பொருளில் பகைவர்க்குப் பற்றுக்கோடாகிய அரணையழித்த பெருந்திறலைக் குறிக்கும் புறத்துறையின் பெயராய் வழங்குவதென்பதும், இத் துறையில் புலவர்பாடும் பாடாண்திணைப் பாடல்களில், மாயோ னாகிய காத்தற் கடவுள் 'சோ' என்னும் அரணையழித்த பேராற். றலும் இணைத்துப் போற்றப்படுதலால் அத்துறை கடவுள் வாழ்த் தொடு பொருந்திய நிலையினையுடையதாயிற்று என்பதும் இங்கு உய்த்துணரத்தக்கனவாம்.

'வந்ததுகொண்டு வாராதது முடித்தல்' என்பதனால் புலவ ராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்திவருமெனவும் கொள்க’ முருகாற்றுப்படையுள்,

'மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவ யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி' (திருமுருகா-எக எக.) என்ற வழி ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட்சார்த்திய வாறு காண்க. இனிப் பரவற்குச் சார்த்து வருமாறு 'கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் (யா. வி. அக மேற்கோள்) என்னுங் கலிப்பாவினுள்

'அடுதிறலொருவதிற் பரவுதும் எங்கோள் தொடுகழற் கொடும்பூண் பட்டெழின் மார்பிற் பயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் தொன்று முதுகட லுலக முழுவதும் புரி திகிரி யுருட்டுவோ னெனவே?

என்பதனுள் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தியவாறு காண்க. 'பிறவும் 9676T', எனவரும் இளம்பூரணர் உரைப்பகுதி, கொடி நிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றுமேயன்றிப் பிற துறைகளும் பாட்டுடைத் தலைவர்களை வாழ்த்தும்வழிக் கடவுள்வாழ்த் தொடு கலந்து வருதற்குரியன என்னும் வழக்கியல் மரபினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

மாற்றாரை வென்றுயர்த்த கொடியின் சிறப்புணர்த்தும் கொடிநிலையென்ற துறையும், மாற்றாரது அரணையழித்த வெற்றித் திறத்தைக் குறிக்கும் கந்தழி என்னுந்துறையும், தறுகண் மையினால் போருடற்றிய வீரர்க்கும் பரிசிலர்க்கும் வரையாது வழங்குதலாகிய மாறா வண்மையைக் குறிக்கும் வள்ளி என்னுந்