பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/335

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உ.அ க.க.இ

துறையும் பாட்டுடைத்தலைவரொடு இயைத்துப்பாடப்பெறும் நிலையில் கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் என்பதே இந் நூற்பாவின் பொருளாகக் கொள்ளுதல் பொருத் لاساساً (55صري . يلي தாகும்.

பாட்டுடைத் தலைவரது ஊக்கம் நிலைபெறக் கொடிநிலை யும், மாற்றாரை வெல்லும் உறுதி நிலைபெறக் கந்தழியும், தம் கீழ்வாழ்வார்க்கு வரையாது வழங்கும் வண்மை நிலைபெற வள்ளி யும் ஆகிய துறைகளிற் பாடாண்பாட்டுப் பாடுங்கால் அவர்தம் வழி படு தெய்வத்தின் திருவருளை வேண்டி வாழ்த்துதல் பாடாண் மரபு என்பதனை வற்புறுத்துவதே இந்நூற்பாவின் கருத்தாதல் உய்த்துணரத்தகுவதாகும்.

28. கொற்ற வள்ளை ஓரிடத் தான.

இளம் : இது, பாடாண்தினைக்கு உரியதொரு பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) கொற்றவள்ளை ஒர் இடத்து ஆன கொற்ற வள்ளையும் ஒர் இடத்துப் பாடாண்பாட்டாம்.

என்றது, துறைகூறுதல் கருத்தாயின் வஞ்சியாம்: புச்ச்சி" கருத்தாயின் பாடாண்திணையாம் என்றவாறு.”

உதாரணம்

'வல்லாசாயினும்......கந்தாற்றாவே' புறம்-டு எ நச்சர் :

2. கி.

இஃது எய்தாதது எய்துவித்தது; தேவர்க்கும் உரியவா" சிே சார் அப் பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின்.

(இ-ள்) கொற்றவள்ளை-அதிகாரத்தாற் கைக்கிளைக்குப் புறனாய் வெட்சி முதல் வஞ்சி பீறாகிய பாடாண் கொற்ற வள்ளை ஓரிடத்தான்-மேற்கூறி நின்ற தேவர் பகுதிக் கண்ண் தன்றி அவரின் வேறாகிய மக்கட் பகுதிக்கண்ணது என்றவாறு

எனவே, உழிஞை முதலிய பாடாண் கொற்றவள்ளை நற்றிளைஞருங் கூளிச்சுற்றமும் ஒன்றனை நச்சிப் புகழ்ந்தி வாளாதே கூறுதலும், ஈண்டுக் கூறுகின்ற கொற்றவள்ளை

1. வல்லாராயினும்’ என்னும் முதற்குறிப்புடைய முஎ-ஆம் புறப்பாடல் வஞ்சித்திணையிற் கொற்றவள்ளையென்னுந்துறைக்குரியதாயினும் நீ பிறர் நாடு கொள்ளுங்காலைப் பகைவரது காவல் மரத்தை வெட்டுதலைத் தவிர்க, தவிரசது வெட்டுவாயாயின் நின் யானைக்குக் கட்டுதற்குரிய தறிகள் கிடைக்கமாட்டா என அரசனைப் புகழ்தல் கருத்தாதலின் பாடிாண்பாட்டாயிற்று என்ப்தாடி,