பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


枋.岛母际 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய ஏழனானும் புகழ்ந்து ரைத்தலுமாயிற் றாதலிற் படையியங் கரவம் (தொல்-புறத் திணை. கூ) முதலாக வஞ்சியிற் குன்றாச்சிறப்பிற் கொற்ற வள்ளை பீறாகக் கிடந்த பொருட்பகுதியெல்லாம் பாடாண் டிணையாகப் பாடுங்கான் மக்கட்கே யுரிய என்பது உம், உழிஞை முதலியவற்றைப் பாடாண்டிணையாகப் பாடுங்கால் அவை மக்கட்குந் தேவர்க்கும் ஒப்ப உரியவென்பதுTஉங் கூறுதலா யிற்று.” என்னை? அரசியலாற் போர்குறித்து நிரைகோடலும் மீட்டலும் மேற்செல்லும் வஞ்சியுந் தேவர்க் கேலாமையாயினும், அவுனரான் முற்றப்பட்டதுறக்கத்தினை அகத்துழிஞை யரணாக்கி மனுவழித் தோன்றிய முசுகுந்தனோடு இந்திரன் காத்தாற் போல் வனவும் பிறவுந் தேவர்க்குக் கூறுதலான் அவரும் மதின் முற்றிய வழிப் போர் தோன்றுதலும் ஆண்டு வென்றியெய்துதலும் உடைய ராதலின் பாடாண் பொருட்கும் உரிபாரென நேர்பட்டது,

இச் சூத்திரம் மக்கட்கெய்திய பொருண்மையை மீட்டுங் கூறி நியமித்ததாம்; ஆகவே, வெட்சி முதல் வஞ்சியிற் கொற்றவள்ளை ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்டிணைக்குரியராகி இடைபுகுந்த தேவர்க் காகவென விதிவகையான் விலக்கியதாம் எனவே, தேவர்க்கு உழிஞை முதலிய கொற்றவள்ளை ஆமென்ப தூஉங் கூறினாராயிற்று.

கொடிநிலை முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப் பட்டாரை அதிகாரங்கொண்ட அளவேயாமென் றுணர்க.

உதாரணம் :

'மாவடியபுல நாஞ்சிலாடா...... நெடுந்தே ரோட்டியபிற கன்றலை நர்டே."

(பதிற்று. உடு)

1. கொற்றவள்ளை என்பது, வஞ்சித்தினைத் துறைகளுள் ஒன்றாக ಆ8T675 கூறப்பெற்றது. கைக்கிளைக்குப் புறனாய் வெட்சி முதல் வஞ்சி ஜோகிய பாடாண் கொற்றவள்ளை எனவும், உழிஞை முதலிய பாடாண் கொற்ற வள்ளையெனவும், கொற்றவள்ளையை இரண்டாகப் பகுத்து, இவற்றுள் முனனையது மக்கட் பகுதியாகிய ஓரிடத்தின் கண்ண து; தேவர்க்கு ஆகாது எனவும், பின்னையது மக்கட்குத் தேவர்க்கும் ஒப்பவுரியது எனவும் விளக்கங் கூறுவர் நச்சினார்க்கி னியர்.

2. w அவுணரால் வளைக்கப்பட்ட இந்திானது நகரத்தை அகத்துழிஞை யரனாக்கி முசுகுந்தன் என்னும் சோழமன்னன் காத்த செய்தி,

கடுவிசை யவுணர்கணங் கொண்டிண்டிக் கொடு வரி பூக்கத்துக் கோநகர் காத்த தொடுகழல் மன்னற்கு (கடலாடு, எ~க) எனவும்

அமராபதிகாத்து (மேற்படி கச) எனவும் வரும் சிலப்பதிகாரத் தொடர் களாற புலனாம். :