பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உ.அ #_ ¢T

இது புலவன் பொருணச்சிக் கூறலிற் பாடாண்கொற்ற வள்ளை, வல்லாராயினும் வல்லுநராயினும் காலனுங் காலம்’ என்னும் (இஎ, சக) புறப்பாட்டுக்களும் அது. {- F}

பாரதியார்

கருத்து :- கடவுள் வாழ்த்துக் கண்ணிய பாடானாகும் வெட்சிவகை மூன்றை மேற் சூத்திரம் குறித்தது. இது, வஞ்சி வகைக் கொற்ற வள்ளையும் ஒரோவழிக் கடவுள் வாழ்த்தொடு பாடானாமெனக் கூறுகிறது.

பொருள் :- வெளிப்படை.

குறிப்பு :- முன் சூத்திரம் சுட்டும் வெட்சி வகை மூன்றும் பாடாணாங்கால் எப்போதும் கடவுள் கண்ணியே வரும், அவை போலாது வஞ்சிவகைக் கொற்றவள்ளை பாடாணாங்கால் ஒரோ விடத்து மட்டும் கடவுள் வாழ்த்தைத் தழுவி வரும். எனவே, "வள்ளை' கடவுள் வாழ்த்தின்றி மக்கள் சீர்த்திமட்டுஞ் சுட்டிப் பாடானாய் வரும் பெற்றியதென்பது பெறப்படும். திணைவேறு பாட்டோடு இத் தன்மை வேறுபாடுடைமையாலும் வள்ளை மற்ற வெட்சி வகை மூன்று போலப் போர்க்கு முன்னிகழாமல் தொடங் கியபின் நிகழ்வதாலுமவற்றோடு சேர்க்காமல் பிரித்திதனைத் தனி வேறு நூற்பாவில் விளக்க நேர்ந்தது.

புறம் 7-ஆம் பாடல் வஞ்சிவகைக் கொற்றவள்ளை, கரிகாற். சோழன் போர்ச்செலவின் புகழும் அவன் பகைவர் நாடழிவின் பரிவுங் கூறுதலாற் கடவுள் கண்ணா வஞ்சிப்பாடானாயிற்று. இனிக் கொற்றவள்ளை, கடவுள் கண்ணிய பாடாணாதற்குச் செய்யுள் :

நோர் நிலமழிய நீள்மதிலுளர் தாமெசியப் போர்மேல் வழுதிபடை போவதற்குக்-கார்குறுதும் நெற்றி விழியோனை நேர்ந்தவன்றாள் பாடுதுநாம் கொற்றந் தரவுலக்கை கொண்டு’

இதில் கண்ணுதற் கடவுளை வாழ்த்திப் போர்மேற் செல்லும் பாண்டியன் தமிழ்ப் படையைப் பாராட்டி நெற்குறும் பெண்டிர் பாடுதலாலிது வள்ளைப் பாடானாதலறிக.