பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/338

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


if & ఖి தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஆய்வுரை -

. پانی سg . ۲ ئL رَبِّیَ الْوَقِ இதுவும் பாடாண்திணையிற் கடவுள்வாழ்த்தொடு விரவிவரு தற்குரிய பொருள் கூறுகின்றது.

(இ-ள்) குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை' என முன் வஞ்சித்திணைக்குரியதாகச் சொல்லப்பட்ட கொற்றவள்ளை என்னுந்துறையும் ஒரோவழிக் கடவுள்வாழ்த்தொடு பொருந்திப் பாடாண்பாட்டாய் வரும். எ-று.

இந்நூற்பாவுக்கு கொற்றவள்ளையும் ஓரிடத்துப் பாடாண் பாட்டாம் எனப்பொருள் வரைந்த என்றது, துறை கூறுதல் கருத்தாயின் வஞ்சியாம்; புகழ்தல் கருத்தாயின் பாடானாம்: என விளக்கங் கூறுவர் இளம்பூரணர்.

மன்னவன் புகழ்கிளந்தும் ஒன்னார் நாட்டின் அழிவுக்கு இரங் கியும் பாடப்பெறும் கொற்றவள்ளைப் பாடல், ஒரோவழிக் கடவுள்வாழ்த்தொடு பொருந்திவரும் என்பது இந்நூற்பாவின் பொருளாகும். பகைவர் நாடழிவிற்கு இரங்கும் துன்பியலிடத்தி லன்றி மன்னவனது புகழ்கிளக்கும் இன்பியலிடமாகிய ஓரிடத்தி லேயே கடவுள் வாழ்த்துப் பொருந்திவரும் என்பார் கொற்ற வள்ளை ஓரிடத்தான' என்றார் ஆசிரியர் எனக் கொள்ளுதல் பொருந்தும்.

கொற்றவள்ளை கடவுள் வாழ்த்தொடு பொருந்திப் பாடாண் பாட்டாய் வருதற்கு நேரார் நிலமழிய' என்ற செய்யுளை உதாரணமாகக் காட்டுவர் நாவலர் பார தியார்.

29. கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் அடுத்துர்ந் தேத்திய இயல்மொழி வாழ்த்தும் சேய்வால் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானும் கண்படை கண்ணிய கண்படை நிலையும் கபிலை கண்ணிய வேள்வி நிலையும் வேலை நோக்கிய விளக்கு நிலையும் வாயுறை வாழ்த்தும் செவியறி வுறுஉவும்: ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇத்

தொக்க நான்கும் உளவென மொழிப.

.வேலின் நோக்கிய. 2 உறு உம் .1 لفـسا 5لة )