பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à- 3 - C தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

கபிலை கண்ணிய வேள்விநிலையும்-கபிலையைக் குறித்த வேள்விநிலையும்.

வேலை நோக்கிய விளக்குநிலையும் . வேவினைக் குறித்த விளக்கு நிலையும். நோக்குதலாவது, விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல்.

வாயுறை வாழ்த்தும் - வெஞ்சொல்லைப் பிரித்தலின்றிப் பிற் பயக்குமென்று வேம்பும் கடுவும்போல ஒம்படைக் கிளவியாலே மெய்யுறக் கூறுதலும்.”

வாயுறை வாழ்த்தின் இலக்கணம் “வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழி நளிை பயக்குமென்று ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.'

(தொல், செய்யு. க0 அடி செவியறிவுறுாவும்-உயர்ந்தோர்மாட்டு அவிந்து ஒழுகுதல் வேண்டும் எனச் செவியறிவுறுத்துக் கூறுதலும்.

செவியுறையின் இலக்கணம் 'செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் சுடனெனச் செவியுறுத் தற்றே .'

(தொல். செய்யு. ககC)

ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்.மன்னன் இடத்ததாகி வரும் புறநிலை வாழ்த்தும். அது,

3. கயிலை என்பது, வேள்விக்குரிய பால் தயிர் நெய் முதலியவற்றைத் தரு தற்குரிய பாற்பசு.

4. வேலினோக்கிய என்பது நச்சினார்க்கினியர் உரையிலுள்ள பாடம்.

5. வெஞ்சொல் தாங்குதலின்றி என்பதற்கு வெஞ்சொல்லைப் பிரித்த லின்றி எனப் பொருள் கொள் வர் இளம் பூரணர். தாங்கு தல்-தடுத்தல்; வெளிப் படாது அடக்குதல். தாங்கு த லின்றி. எனவே பிற்காலத்தில் நற்பயன் விளைக்கும் என்னும் நோக்கில் பாட்டுடைத்தலைவனைத் திருத்து தற்குரிய வேம்பும் கடுவும் போன்ற வெஞ்சொற்கள் வாயுறை வாழ்த்தில் இடம் பெறுதல் உண்டு என்பது இளம்பூரணர் கருத்தாதல் புலனாம். வேம்பு, கைப்புச் சுவையுடையது. கடு என்பது துவர்ப்புச் சுவையினதாகிய கடுக்காய்.

புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஒருபாற்கேண்மையாகிய கைக் கிளையைக் கைக்கிளைப் படலத்தில் ஆண்பாற்கூற்று பெண்பாற் கூற்று என இரு வகையாகப் பகுத்துரைத்தலால் கைக்கிளை வகை என்பதற்கு ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையும் பெண்பாற் கூற்றுக் கைக்கிளையும் எனப் பொருள் வரைந் தாம் இளம்பூரணர்.