பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/341

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உக 1.உக்

வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே'

(தொல் செய்யு. கoசு) என்பதனால், இனிது வாழ்மின் என்னும் பொருள்மேல் வரும்.

கைக்கிளை வகையொடு-ஆண்பாற்கூற்றுக் கைக்கிளையும் பெண்பாற்கூற்றுக் கைக்கிளையும்."

இவையும் பாடாண் பாட்டாம் என்றவாறு. உளப்பட தொகைஇ தொக்க நான்கும் உள என மொழிய உளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் (முன்னையவும் இத்திணைக்கு) உள என மொழிப.

நச்சர் :

శ్రి

இது முன்னிற் சூத்திரத்து அதிகாரப்பட்டு நின்ற மக்கட் பாடாண்டினைக் குரிய துறை கூறுகின்றது.

(இ-ஸ்.) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக்கூறிப் பிறர்க்கீயாதாரை இழித்துக் கூறலும்:

சான்றோர்க்குப் பிறரை யிழித்துக் கூறற்கண்ணது தக்கதன் றேனும் நன்மக்கள் பயன்பட வாழ்தலுந் தீயோர் பயன்படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவரென்பது பயப்பக்கூறலின் இவர்க்கு இங்ங்னம் கூறுதல் தக்கதாயிற்று. இதனை ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலு மென மூவகையாகக் கொள்க.

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் தலை வனெதிர்சென்று ஏறி அவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும் அவன் மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்தும்;

என்றது, இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம் இக் குணங்கள் இயல்டென்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையை யென்றும், அன்னோர்போல எமக்கு நீயும் இயல்பாக ஈ யென்றும்உயர்ந்தோர்

1. சான்றோர், கொடாரைப் பழித்தல் தக்க தாமோ என்பதற்கு இங்கு நச்சி னார்க்கினியர் தரும் விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகும்.