பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


班_諡_淀一 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

கூறி அவனை வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று. இதனை உம்மைத் தொகையாக்கி இயன் மொழியும் வாழ்த்து மென இரண்டாக்கிக்கொள்க.

இஃது ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறலாலும் வண்ணப் பகுதியின்மையானும் பரவலின் வேருயிற்று.

"இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வணிக ணாயலன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென வாங்குப் பட்டன் றவன் கைவண் மையே.’ (புறம்-கங்.ச) இது பிறருஞ் சான்றோர் சென்ற நெறி யென்றமையின் அயலோரையும் அடுத்துார்ந்தேத்தியது. இன்னும் வேறுபட வரு வனவெல்லாம் இதன்கண் அடக்குக.

சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலற்கு உரைத்த கடை நிலையானும்-சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத் தந்திர வாயில் காக்கின்றவனுக்கு என வரவினை இசையெனக் கூறிக் கடைக்கணின்ற கடைநிலையும்;

இது வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ்வருத்தந் தீர்க்கும் பாடாண்டலைவனதே துறையென்பது பெற்றாம்.

இழிந்தோரெல்லாத் தத்தம் இயங்களை இயக்கிக் கடைக் கணிற்றல் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் (தொல். பொரு-புற டிசு) என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம்."

இது தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை நோக்கிக் கூறலில் பரிசில் கடாயதின்றாம்.

ஆன்; அசை ஏழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்தலு மொன்று.

கண்படை கண்ணிய கண்படைநிலையும்-அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி மருத்து வரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண்டுயில் கோடலைக் கருதிக் கூறிய கண்படை நிலையும்;

1. கடைநிலையும் கடைக்கூட்டுநிலையும் வெவ் வேறு துறைகள். இவை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு குறித்தன அல்ல. கடை-வாயில். கடைநின்லயர்வது, நீண்ட துரத்திலிருந்து வரும் பரிசிலன், வள்ளலது வாயிலின் கண் நின்று வாயில்காவலர்க்குத்தாம் இன்னாரென அறிவித்தல். பரிசில் சடைஇய இடக்கூட்டு நிலையாவது, பரிசில் பெற விரும்பியோர் தமது வறுமைத்துயர் நிலை கூறிப் பரிசிற்பொருளை வினவிக் கேட்டுத் தாம் வந்த செயலை நிறை வேற்றிக் கொள்ளுதலாகும். கடைஇய-கடாவிய. கடைக்கூட்டுதலாவது கருதிய செயலை நிறைவேற்றிக்கொள்ளுதல்.