பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உகூ 忍-&-施。

கண்படை கண்ணிய என்றார், கண்படை முடிபொருளாக இடைநின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு.

கபிலை கண்ணிய வேள்வி நிலையும்-சேதாவினைக்கொடுக்கக் கருதிய கொடைநிலை கூறுதலும்:

இது வரையா ஈகையன்றி இன்னலுற்றாற் கொடுக்கவென உயர்ந்தோர் கூறுநாட் காலையிலே கொடுப்பதாமாதலின் வேறு கூறினார். கண்ணிய என்றதனாற் கன்னியர் முதலோரைக் கொடுத்தலுங் கொள்க.

'பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற்

கற்றாத ந் தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச்-சென்னிதன் மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த் தானுலக மண்ணுலக மன்று. ’’ வேலின் ஒக்கிய விளக்கு நிலையும்’-வேலும் வேற்றலையும் விலங்காதோங்கியவாறு போலக் கோலோடு விளக்கும் ஒன்றுபட் டோங்குமாறு ஒங்குவித்த விளக்குநிலையும்.

இன்: உவமப்பொருள் இது கார்த்திகைத் திங்களிற் கார்த் திகை நாளின் ஏற்றிய விளக்குக் கீழுமேலும் வலமுமிடமுந் திரிபரந்து சுடர் ஓங்கிக் கொழுந்து விட்டெழுந்ததென்று அறிவோராக்கங் கூறப்படுவதாம்.

வேலின் வெற்றியை நோக்கிநின்ற விளக்குநிலையெனப் பொருள் கூறி.

'வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி

(புறப்-வெ.மாலை-பாடாண். கஉ) என்பது காட்டுவாரும் உளர். அவர் இதனை நிச்சம் இடுகின்ற விளக்கென்பர்.

வாயுறை வாழ்த்தும்-வாயுறை வாழ்த்தே...வேம்புங்கடுவும்: என்னும் (கக உ) செய்யுளியற் சூத்திரப்பொருளை உரைக்க.

1. வேலைநோக்கிய விளக்கு நிலை எனப்பாடங்கொண்டு, வேலினைக் குறித்த விளக்குநிலை எனப்பொருள் கூறினார் இளம் பூரணர். வேலினோக்கிய ಅಣ5ು! எனப் பாடங்கொண்டு வேலின் ஒக்கிய விளக்கு நிலை எனப் பிரித்து 3 GH శrg செங்கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு இங்குமாறு ஓங்கு வித்த விளக்கு நிலை’ எனப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர்.

வேலின்-வேல்போன்று. ஒக்கிய-ஒங்குவித்த, இங்கு விளக்கு என்றது, கார்த்திகைத் ங்களில் கார்த்திகை நாளில் எம் வி எ க்கு என்பர் நச்சினார்க்கினியர் . தி த்தி 马> ஏற்றிய

நிச்சம் இடுகின்ற விளக்கு என்றது, நாள்தோறும் ஏற்றும் விளக்கினை.